ஸ்டாலின் அமரிக்கா செல்ல உள்ளதால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்[படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும். அமைச்சரவையில் 3 புதியவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதால் இந்த மாற்றம் நடைபெற உள்ளது.
ஸ்டாலின் தமிழக முதல்வராக பதிவியேற்றது முதல் 2 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாரய மணம், ஆம்ஸ்ராங் கொலை தொடர்பாக சட்ட ஒழுங்கு மீது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் பல்வேறு அதிகாரிகள் மாற்றம் செய்யபப்ட்டனர். தமிழக தலைமை செயலாளர் மற்றும் முதல்வரின் தனிச் செயலாளர்களும் அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டனர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் வருகின்ற 27ம் தேதி மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டில் தொழில் முதல்லீடுகளை ஈர்க்க செல்கிறார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டபோது, ” எனக்கே தகவல் இல்லை ” என்று தெரிவித்துள்ளார். மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்கள் கேல்விக்கு முதல்வர் இவ்வாறு பதிலளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“