Advertisment

எம்.எல்.ஏ-க்களை கடத்துவதற்கு அவர்கள் என்ன குழந்தைகளா? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் கேள்வி

இயலாமை காரணமாக. அடுத்தவர்களின் மீது குற்றம் சுமத்தி ஆதாயம் தேடலாம் என முயற்சிப்பதாக டிடிவி தினகரன் குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
TTV Dinakaran

எம்.எல்.ஏ-க்களை கடத்துவதற்கு அவர்கள் என்ன சிறு குழந்தைகளா என டிடிவி தினகரனுக்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

மதுரை மாவட்டம் மேலூர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையிலான அதிமுக அணியை கடுமையாக விமர்சித்தார். அதிமுக தலைமை கழகத்தை கைப்பற்றுவது, தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி அவர்களை சாடினார்.

மேலும், கூட்டத்திற்கு வரவேண்டிய எம்.எல்.ஏ-க்களை, எடப்பாடி தலைமையிலான அரசு கடத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக டிடிவி தினகரன் பேசும்போது: இங்கு வரவேண்டிய இரண்டு, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டியவர்களை தூக்கிக்கொண்டு சென்று, சென்னையில் மறைத்து வைத்திருக்கின்றனர். எம்.எல்.ஏ-க்ளை சென்னையில் கொண்டு சென்று மறைத்து வைத்தவர்கள், உங்களால் விரைவில் ஒழிக்கப்படுவார்கள்.

அவர்கள் எப்படி பதவிக்கு வந்தனர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் வேண்டாம், இவர்கள் வேண்டாம் என ஒர் அறைக்குள் இருந்து தீர்மானம் போடலாம். வெளியில் வந்து நின்று பாருங்கள். பதவி என்ற மமதையில் இருந்தால் தொண்டர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று பேசினார்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: அதிமுக-விற்குள் அண்ணன் தம்பி பிரச்சனை தான் நடந்து வருகிறது. அதன் மூலம் சிலர் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம். எல்.எல்.ஏ-க்கள் என்பவர்கள் குழந்தைகள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் வயது 25-க்கும் மேல் தான் இருக்கும். 5-வயது 10-வயது குழந்தைகளுக்கு சீட் கொடுக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறவில்லை. 25-வயதுக்கு மேல் இருப்பவர்களை யாராவது கடத்த முடியுமா? இதை சிந்தித்து பார்க்க வேண்டும். சிலர் இயலமை காரணமாக. அடுத்தவர்களின் மீது குற்றம் சுமத்தி ஆதாயம் தேடலாம் என முயற்சிக்கின்றனர் என்று டிடிவி தினகரனை விமர்சித்தார்.

இதேபோல திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் குறித்து பேசும்போது: மு.க ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment