Advertisment

மகன் திருமணத்துக்கு ரூ.3 கோடி செலவு… சாப்பாட்டுக்கு ரூ.1.5 கோடி - அமைச்சர் மூர்த்தி தகவல்

அமைச்சர் மூர்த்தி தனது மகன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், தனது மகன் திருமணத்திற்கு ரூ. 3 கோடி செலவு செய்ததாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
மகன் திருமணத்துக்கு ரூ.3 கோடி செலவு… சாப்பாட்டுக்கு ரூ.1.5 கோடி - அமைச்சர் மூர்த்தி தகவல்

அமைச்சர் மூர்த்தி தனது மகன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், மூர்த்தி தனது மகன் திருமணத்திற்கு ரூ. 3 கோடி செலவு செய்ததாகவும் அனைவரையும் சமமாக அமர வைத்து ரூ. 1.5 கோடி செலவில் உணவளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

மதுரையில் செப்டம்பர் 29 ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி, அமைச்சர் மூர்த்தி பிரமாண்டமாக மகன் திருமணத்தை நடத்தினார். இதற்கு எங்கிருந்து பணம் வந்தது? 30 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடத்தியுள்ளார் என விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் மூர்த்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து வெள்ளிகிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது மகன் திருமணத்திற்கு ரூ.3 கோடி செலவு செய்துள்ளேன். அனைவரையும் சமமாக அமர வைத்து ரூ.1.5 கோடி செலவில் உணவு கொடுத்தேன்” என்று கூறினார்.

அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பெரியார் பஸ் ஸ்டாண்டில் தோண்டிய மண்ணை அவர்கள் எத்தனை கோடிகளுக்கு விற்பனை செய்தார்கள் என்று தெரியாதா? எதில் அரசியல் செய்ய வேண்டும் என தெரிந்து நாகரீகமாக அரசியல் பண்ண வேண்டும்.

எங்கள் மகன் கல்யாணத்தில் ஏழை எளிய மக்கள், சாதிகளுக்கு அப்பாற்பட்டு, அனைவரையும் சமமாக உட்கார வைத்து சாப்பாடு போட்டேன். சாப்பாடு போட்டல் என்ன?

ஒரு இலைக்கு 300 ரூபாய் என்றால் கூட 50,000 பேர் சாப்பிட்டால் ஒன்றரை கோடி ரூபாய்தான் செலவு வரும். 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவானது என்று கூறுகிறாரே, இவர்தான் கணக்குப்பிள்ளை வேலை பார்த்தாரா? இவர் பொதுச் செயலாளர் ஆவதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவழித்து இந்த பதவிக்கு வந்திருக்கிறார். முதலமைச்சராவதற்கு இவர் அந்த அம்மையாரிடம் எப்படி காலில் விழுந்தார். அதனால், நாகரீகம் கருதி அரசியல் பண்ண வேண்டும்.

அ.தி.மு.க ஆட்சியில் அலங்காநல்லூரில், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்தினார்களே அதற்கு யார் சாப்பாடு போட்டது, அ.தி.மு.க ஆட்சியில் அன்றைக்கு 2 நாளைக்கு சாப்பாடு போட்டது யார்? அவரா போட்டார்? சும்மா இப்படி சொல்லிக்கொண்டே போனால் நாகரீகம் இல்லை” என்று எடப்பாடி பழனிசாமிக்கு கோபமாக பதிலளித்துப் பேசினார்.

அமைச்சர் மூர்த்தி தனக்கு ரூ. 11 கோடிக்கு சொத்துகள் இருப்பதாகவும் ரூ. 4 கோடிக்கு கடன்கள் இருப்பதாகவும் தேர்தல் வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment