அவர் “சீக்குவந்த கோழி, அழுகிப்போன தக்காளி”... அமைச்சர் ரஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்!

என்னைப் பதவியை விட்டு விலகச் சொல்வதற்கு வைகைச் செல்வன் என்ன நாட்டின் ஜனாதிபதியா? அல்லது தமிழகத்தின் ஆளுநரா? அல்லது முதல்வரா?

வைகைச் செல்வன் குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாலில் கலப்படம் செய்த தனியார் நிறுவனங்கள் குறித்து அறிவித்தார். இதனிடையே செய்தியார்களின் கேள்விகளின் பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி கூறும்போது: “வைகைச் செல்வன் சீக்கு வந்த பிராய்லர் கோழி, அழுகிபோன தக்காளி, அவை சாப்பிடவும் ஆகாது குழும்பு வைக்கவும் ஆகாது. அவரை பற்றி பேசுவது வேஸ்ட். தனியார் பால் முகவர் பேல வைகைச் செல்வன் பேசுகிறார்.

வைகைச் செல்வன் கூறியது போல நான் சினிமா போஸ்டர் ஒட்டியவன் கிடையாது, அதிமுக-வின் கட்சி சம்பந்தப்பட்ட போஸ்டர் ஓட்டியவன். நான் எங்கு வேண்டுமானாலும் வந்து கூறுவேன் சிவகாசி மட்மல்ல விருதுநகர் முழுக்க அதிமுக போஸ்டர்களை ஒட்டியிருக்கிறேன்.

நான் பெரிய தொழில் அதிபரோன் மகன் என கூறிக்கொள்ளவில்லை. சாதரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். வைகைச்செல்வன் என்னமோ மிட்டா மிராசு பையனாகவோ அல்லது பிரிட்டிஷ் இளவரசரின் மகனாகவோ இருக்கலாம். சினிமா போஸ்டர்வர்கள் எல்லாம் தவறு செய்பவர்களா? அல்லது அவர்கள் கஞ்சா வியாபாரியா?

கட்சி சார்ந்த கருத்து வேறுபாடு காரணமாக பதவி பறிக்கப்படுவது வழக்கம். ஆனால், அவரின் பதவி எப்படி பறிபோனது தெரியுமா? பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததார். அதனால் தான் அவரது பதவி பறிக்கப்பட்டது.

என்னைப் பதவியை விட்டு விலகச் சொல்வதற்கு வைகைச் செல்வன் என்ன நாட்டின் ஜனாதிபதியா? அல்லது தமிழகத்தின் ஆளுநரா? அல்லது முதல்வரா?” என்று கூறினார்.

×Close
×Close