Advertisment

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister Sengottaiyanm Plus 2 result will be released on july first week, அமைச்சர் செங்கோட்டையன், Minister Sengottaiyan says Plus 2 result will be released on july first week, பிளஸ் 2 தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும், plus 2 result, tamil nadu school education department

Minister Sengottaiyan

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. 4-வது கட்டம் மற்றும் 5வது கட்டம் பொது முடக்க அறிவிப்பின்போது நோய் தொற்று நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக அரசு 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு பின்னர் கொரோனா தொற்று பரவல் ஆபத்து காரணமாக 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பிளஸ் 2 வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகள் அரையாண்டு தேர்வுகள் மதிப்பெண்கள்படி கணக்கிடப்படும் என்று கூறினார். மேலும், மாணவர்கள் தேர்வு எழுதிய பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி பாடத் திட்டங்களை குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை பற்றி எந்த புகார்களும் வரவில்லை. ஏதேனும் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu School Education Department Plus 2 Minister K A Sengottaiyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment