Advertisment

’கல்குவாரிக்கும் கரூர் காரர்களுக்கும் என்ன சம்பந்தம்: ரைடுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை': அமைச்சர் செந்தில் பாலாஜி

கல்குவாரிக்கும் கரூர் சேர்ந்தவர்களும் என்ன சம்பந்தம், வருமானவரித்துறைக்கு தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் காட்டமாக பதில் அளித்தார்.

author-image
WebDesk
New Update
அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது,இதில் வனத்துறை சார்பில் புலி சிறுத்தை மற்றும் வனவிலங்குகளின் உருவ பொம்மைகள் இடம்பெற்றன

Advertisment

மற்றும் தோட்டக்கலை,மலர் கண்காட்சி,பரதநாட்டியம்,மிருதங்கம் வாசித்தல் கலை நிகழ்ச்சிகளும் என பல்வேறு துறை சார்பில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது, நேற்று கோடை விழா நிறைவிழாவை அடுத்து மின்சாரத்துறை ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா,பத்தாம் வகுப்பு மட்டும் பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சீட்ல்டுகள்ள் வழங்கி உதவி தொகை வழங்கப்பட்டது.

publive-image

இதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: “வால்பாறையில் இனி வருடம் தோறும் கோடை விழா நடத்தப்படும்,தமிழக முதல்வரின் பல நல்ல திட்டங்கள் தமிழக மக்களுக்கு நிறைவேற்றப்படும் எனவும் நிருபர்கள் கிணத்துக்கடவு ,நெகமம்,பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்குவாரிகளில் எடுக்கப்படும் கனிம வளங்கள் தினம்தோறும் ஐயாயிரம் டாரஸ் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது .

publive-image

இதற்கு கரூரை சேர்ந்த நபர்கள் வண்டி ஒன்றுக்கு 400 விதம் வசூலிப்பதாக கேள்வி கேட்டதற்குகல்குவாரிக்கும்  கரூர் சேர்ந்தவர்களும் என்ன சம்பந்தம்,வருமானவரித்துறைக்கு தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் காட்டமாக பதில் அளித்தார்.ஆதாரம் இருந்தால் விவசாயிகள் என்னை வீட்டில் வந்து சந்தித்து பேசலாம் என பேசியாவாரு தனது காரில் பயணம் செய்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment