மக்களவை தேர்தல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை விருப்ப மனுத் தாக்கல்

அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.4 முதல் 10-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். […]

minister vijayabaskar father chinnathambi filed nomination for lok sabha election - மக்களவை தேர்தல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை விருப்ப மனுத் தாக்கல்
minister vijayabaskar father chinnathambi filed nomination for lok sabha election – மக்களவை தேர்தல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை விருப்ப மனுத் தாக்கல்

அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.4 முதல் 10-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு விநியோகம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோரும் விருப்ப மனு பெற்றனர். இதைத் தொடர்ந்து, விருப்ப மனு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இதற்கான காலக்கெடு இன்றுடன்(பிப்.14) முடிவடைந்தது. மொத்தம் 1,737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். அத்துடன் கரூர் தொகுதியில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை சின்னதம்பி விருப்ப மனு அளித்துள்ளார். ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் மகன், துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஆகியோரும் விருப்ப மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister vijayabaskar father chinnathambi filed nomination for lok sabha election

Next Story
பாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரிParty reformation in TN seems impossible
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X