கார் விபத்து ஏற்படுத்திய 15 வயது சிறுவன்… ஒருவர் பலி… தந்தை கைது!

Minor Car Accident : சென்னையில் தந்தையின் காரை ஓட்டிச் சென்ற 15 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தியதால், தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் சிறுவனின் நண்பன் பலியானார். Minor Car Accident : ஹைவேயில் நடந்த விபத்து: கடந்த வாரம் சனிக்கிழமை, என்னூர் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் மதியம்…

By: August 27, 2018, 12:46:54 PM

Minor Car Accident : சென்னையில் தந்தையின் காரை ஓட்டிச் சென்ற 15 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தியதால், தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் சிறுவனின் நண்பன் பலியானார்.

Minor Car Accident : ஹைவேயில் நடந்த விபத்து:

கடந்த வாரம் சனிக்கிழமை, என்னூர் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் மதியம் 2.15 மணியளவில் அதி பயங்கர சத்தத்துடன், மினி வேன் மோதியது மாருதி ஸ்விஃப்ட் கார். அப்போது அந்த வழியாக சென்ற நபர், விபத்தை கவனித்து அருகில் சென்று பார்த்தார். காரில் 5 சிறுவர்கள் இருப்பது தெரிந்தது. அதில் 4 சிறுவர்களுக்கு காயங்களும், ஒரு சிறுவன் படுகாயத்துடன் இரத்த வெள்ளத்தில் இருப்பதும் தெரியவந்தது.

உடனே அந்த நபர் அந்தச் சிறுவனை ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர், அவன் இறந்துவிட்டதாக கூறினார். இறந்த சிறுவன், என்னூர் நேதாஜி நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்று அடையாளம் காணப்பட்டார்.

தந்தை கைது :

இந்த வழக்கு விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்த சிறுவனுக்கு 15 வயது தான் ஆகிறது என்றும், தந்தை வீட்டில் இல்லாதபோது யாருக்கும் தெரியாமல் காரை எடுத்துச் சென்றுள்ளான் என்ற உண்மை வெளியே வந்தது. போக்குவரத்து சட்டம்படி 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், அதற்கான தண்டனையை பெற்றோர்களுக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை அலெக்ஸ் ராஜ் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி பிரிவுகள் 279, 337, 304 (எ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து போக்குவரத்து போலீஸ் கூறுகையில், “சிறுவனின் பெற்றோர் அவனை கார் ஓட்டுவதை அனுமதித்திருக்கக் கூடாது. அவனுக்கு இந்த வயதில் கார் ஓட்ட கற்றுத் தந்ததே தவறு. இப்போது சட்டம் கடுமையாகிவிட்டது. பெற்றோர்கள் தங்களின் கார் அல்லது பைக் சிறுவர்களிடம் கொடுத்து ஓட்டச்சொன்னால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.” என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Minor boy crashes car father arrested

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X