Advertisment

அயராத உழைப்பு; ஆழ்கடலின் நிதானம்: முக ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

ஒவ்வொரு கட்டத்திலும், ஸ்டாலின் வகித்த பொறுப்புகளுக்குப் பின்னர் அவரின் கடின உழைப்பு இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Birthday MK Stalin

Happy Birthday MK Stalin

Happy Birthday M.K.Stalin : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்தத் தலைவருமான க.அன்பழகன் உடல்நலம் இல்லாமல் இருப்பதால், தனது பிறந்தநாளைக் கொண்டாடப்போவதில்லை எனவும், ஆகையால் தொண்டர்கள் தன்னை சந்திக்க வர வேண்டாம் எனவும் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.

Advertisment

சென்னை மாதவரத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

இன்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவரான ஸ்டாலின் அரசியல் பயணம், இளம் வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கியதில் இருந்து ஆரம்பித்தது. அதன் பிறகு திமுக வட்டப் பிரதிநிதியாகவும், மாமன்ற பிரதிநிதியாகவும் இருந்த அவர், இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சி கூட்டங்களில் பங்கேற்கவும், கட்சி பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

பின்னர், 1980-இல் மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் இளைஞரணி அமைப்பை முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி துவக்கினார். ஆரம்பத்தில் திமுக இளைஞரணியின் அமைப்பாளராகத் செயல்பட்ட மு.க. ஸ்டாலின் , பின்னர் நீண்ட காலமாக திமுகவின் இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்தார். சிறிது காலம் திமுகவின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த ஸ்டாலின், 2008-இல் திமுகவின் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டார். கலைஞருக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில் திமுக-வின் செயல் தலைவராக பணியாற்றிய ஸ்டாலின், அவர் மறைந்த பிறகு தலைவரானார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும், அவர் வகித்த பொறுப்புகளுக்குப் பின்னர் ஸ்டாலினின் கடின உழைப்பு இருக்கிறது.

“1093 மதிப்பெண் எடுத்தும் என்ஜினியரிங் படிக்க வசதி இல்லை” – திருமணத்தால் வைரலான உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்

தேர்தலைப் பொறுத்தவரை 1984-ல் முதன்முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார். ஆனால் அதே தொகுதியில் 1989, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு, வெற்றி கண்டார். அதன் பிறகு 1991-ல் மீண்டும் தோல்வி, 2001, 2006-ல் ஆயிரம் விளக்கு, 2011, 2016-ல் கொளத்தூர் என அடுத்தடுத்த தேர்தல்களில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். தற்போது தமிழக எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தவர்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மக்களுடன் நிற்கும் தலைவர் என இவர் குறிப்பிட்டிருக்கிறார்.

”வடக்கு உனை வாழ்த்திட - தெற்கு உனை வணங்கிட - தாயகம் காக்க வந்த தமிழமுத தலைவர் அவர்களின் பிறந்தநாள்!" என கவிஞர் மு.மேத்தா வாழ்த்தியிருக்கிறார்.

நீங்கள் அரசியல் வாழ்க்கையில் 100 ஆண்டுகளைத் தொட முருகனிடம் பிரார்த்திக்கிறேன் என இந்த பயனர் குறிப்பிட்டிருக்கிறார்.

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் வாழ்த்து.

மக்களின் தலைவருக்கு வாழ்த்துகள் என இந்த பயனர் குறிப்பிட்டிருக்கிறார்.

”அயராத உழைப்பு, ஆழ்கடலின் நிதானம், அநீதி கண்டு பொங்கும் அருவிச் சீற்றம், உடன்பிறப்புக்களின் சுக துக்கங்களில் தோள் தரும் தாய்மடி, தமிழகத்தின் விடியல், இந்தியாவின் நம்பிக்கைமிகு நங்கூரம்- நம் தலைவர் பல்லாண்டு வாழ்க!

பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவருக்கு” என மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

”தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் வழியில் கொள்கைவழுவா தங்கமாக விளங்கும் தலைவர் தளபதி அவர்களின் பிறந்தநாள்!” என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கே.என்.நேருவின் வாழ்த்து.

"தோல்விகளைக் கண்டு துவளாமல், வெற்றிகளைக் கண்டு இறுமாப்பு கொள்ளாமல் தொடர்ந்து பயணித்தபடி இருக்கும் உன் உழைப்பை எண்ணி வியக்கிறோம், தினமும் உன்னிடம் கற்கிறோம்! பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா!" என உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

Mk Stalin M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment