ஆட்சியை காப்பாற்றுங்கள் என்று மோடியின் காலில் விழுவார் எடப்பாடி: ஸ்டாலின் விமர்சனம்!

அவருக்கு தனியாக பாராட்டு விழாவே நடத்தி இருப்பேன்.

டெல்லியில் மோடியை சந்திக்க சென்றிருக்கும்  முதலமைச்சர் எடப்பாடி,  ஆட்சியை காப்பாற்றுங்கள் என்று அவரின் காலில் தான் விழுவார் என்று  எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்  விமர்சித்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலினிடம்  முதல்வர் பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,   எடப்பாடி பயணம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஸ்டாலின் பேசியதாவது, “  டெல்லி சென்றுள்ள முதலமைச்சர், எடப்பாடிக்கு மோடியை சந்திக்க நேரம் கிடைத்தாலும் கண்டிப்பாக அவர் காவிரி பிரச்சனை குறித்து பேசமாட்டார். ஏனென்றால் அவரிடம் அச்சம்  இருக்கிறது. பயமும் இருக்கிறது. என் ஆட்சியை  காப்பாற்றுங்கள் என்று மோடியின் காலில் தான் விழுவார். அவருக்கான வாய்ப்பை தான் முதலமைச்சர் எடப்பாடி பயன்படுத்திக் கொள்வார்.

எல்லோரும் எதிர்ப்பார்க்கும் காவிரி பிரச்சனை குறித்து கண்டிப்பாக அவர் பேச மாட்டார்.  அதைப்பற்றி பேசும் அளவுக்கு தைரியமும், தெம்பும் அவரிடம் இல்லை” என்றார்.

பின்பு,குட்கா  ஊழல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து குறித்து ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் பதில் அளித்த ஸ்டாலின், “ குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை  எடுத்து விட்டு, அதன் பின்பு ஜெயக்குமார் பேசியிருந்தால்  அவருக்கு தனியாக பாராட்டு விழாவே நடத்தி இருப்பேன்.  திமுக ஊராட்சி ஊழியர் மீது அதிமுகவினர் பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து ஏற்புடையதல்ல.

 

×Close
×Close