வைரவிழாவில் கருணாநிதி பங்கேற்பாரா? முக ஸ்டாலின் திட்டவட்டம்

கருணாநிதி வைரவிழாவில் கலந்து கொள்வாரா, கலந்து கொள்ளமாட்டாரா என்பது ஒரு பிரச்சனை, சர்ச்சை என விவாதமாக ஊடகங்கள் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது

By: May 19, 2017, 5:54:02 PM

திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகி ஓராண்டு முடிந்ததையொட்டி கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார். இதனிடையே முக ஸ்டாலின் கூறியதாவது: முன்னதாக கொளத்தூர் தொகுதியை ஆய்வு செய்தபோது கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. அந்த மனுக்களை பரிசீலித்து படிப்படியா‌கப் பிரச்னைகளை சரிசெய்து வருகிறோம். அதன்படி, மருத்துவ முகாம்கள் அமைத்தும், பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி வைரவிழாவில் பங்கேற்பாரா என்ற செய்திளார்களின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின் கூறியபோது: கருணாநிதி வைரவிழாவில் கலந்து கொள்வாரா, கலந்து கொள்ளமாட்டாரா என்பது ஒரு பிரச்சனை, சர்ச்சை என விவாதமாக ஊடகங்கள் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக வைரவிழாவில் கருணாநிதி கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை மருத்துவர்கள் அனுமதி அளித்தால் அவர் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mk stalin clarified that karunanindhi has no chance to participate his diamond jubilee

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X