Advertisment

மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்; மீண்டும் கொளத்தூர் தொகுதியை தேர்வு செய்தது ஏன்?

மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு பிறகு, மு.க.ஸ்டாலின் கொளத்தூரை தனது நிரந்தர தொகுதியாக்க உறுதி செய்துள்ளார் என்பது தெரிகிறது.

author-image
WebDesk
New Update
மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்; மீண்டும் கொளத்தூர் தொகுதியை தேர்வு செய்தது ஏன்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் தொகுதி பங்கீடுகளிலும் தீவிரமாக உள்ளன. திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினர் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை கொளத்தூர் 3வது முறையாக போட்டியிட இன்று விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளியாக தமிழகம் முழுவதும் சுழன்று பிரச்சாரம் செய்து வருகிறார். திமுகவில் கருணாநியின் மகனாக மாணவ பருவத்தில் இருந்து தொடங்கிய ஸ்டாலின் பயணம் இன்று திமுக திமுக தலைவராக தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறார்.

மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக 1984-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஸ்டாலின் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தோல்வியைத் சந்தித்தாலும் 1989ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனார். இதற்கு அடுத்து வந்த 1991ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதற்கு அடுத்து 2001 மற்றும் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து, 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்தான் மு.க.ஸ்டாலின் தொகுதியை மாற்றி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுகவில் சைதை துரைசாமி போட்டியிட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் மு.க.ஸ்டாலின் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். அடுத்து வந்த 5 ஆண்டுகளும் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அடிக்கடி விசிட் அடித்தார். திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஸ்டாலின் தொகுதிமக்களின் நம்பிக்கையை சம்பாதித்தார்.

பின்னர், 2016ம் ஆண்டு தேர்தலிலும் அதே கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் இந்த முறை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போதும் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்றாலும் ஸ்டாலின் தொகுதியில் வெள்ளம், கொரோனா பொது முடக்கம் என எல்லா காலங்களிலும் தொகுதி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி தொகுதி மக்களுடன் இருந்தார். இந்த சூழலில்தான் மு.க.ஸ்டாலின் இன்று திமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரிடம் இந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் விருப்பமனு அளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதன் சட்டமன்றத் தேர்தலில் 9வது முறையாக போட்டியிடுகிறார். கொளத்தூர் தொகுதியில் யார் நின்றாலும் தொகுதி மக்களின் ஆதரவு மு.க.ஸ்டாலினுக்குதான் அந்த தொகுதியின் திமுக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதே போல, கொளத்தூர் தொகுதியில் திமுக ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் கட்சி சாராதவர்களும் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளம், புயல் மற்றும் கொரோனா பொதுமுடக்க காலங்களில் தொகுதி மக்களை சந்தித்து நிவாரணம் அளித்துள்ளார். அதனால், கொளத்தூர் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார் என்ன்று கூறுகின்றனர்.

இந்த நிலையில்தான், மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு பிறகு, மு.க.ஸ்டாலின் கொளத்தூரை தனது நிரந்தர தொகுதியாக்க உறுதி செய்துள்ளார் என்பது தெரிகிறது.

அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்டாலின் எங்கே போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறினார். ஒருவேளை பாஜகவுக்கு கொளத்தூ தொகுதி கொடுக்கப்பட்டால் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment