Advertisment

மு.க.ஸ்டாலினை மணிவிழாவுக்கு அழைத்தேன் : ஹெச்.ராஜா விளக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இல்லாமல் நண்பன் என்ற முறையில் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
H Raja, MK Stalin, dmk, bjp

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இல்லாமல் நண்பன் என்ற முறையில் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விண்ணப்பம் செய்திருக்கிறார். அந்தத் தேர்தலில் அவருக்கு ஆளும்கட்சி ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை, ஹெச்.ராஜா சந்தித்தார். அரசியல் ரீதியாக எதிரெதிர் திசைகளில் இயங்கும் இவர்கள் இருவரது சந்திப்பு குறித்த தகவல்கள் வெளியானதும் அரசியல் வட்டாரம் பரபரப்பானது.

இந்நிலையில், ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, அரசியல் என்பது வேறு, நண்பன் என்பது வேறு. நண்பன் என்ற முறையில் ஸ்டாலினை சந்தித்து எனது மணிவிழாவிற்கு அழைப்பிதழ் விடுத்தேன் என விளக்கமளித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இல்லாமல் நண்பன் என்ற முறையில் தான் அழைப்பிதழ் விடுத்தேன். அரசியல் சார்ந்து ஏதும் பேசவில்லை என தெரிவித்த ஹெச்.ராஜா, சாரணர் சரணியர் இயக்கத்தில் நாங்கள் ஏற்க்கனவே ஈடுபட்டிருந்தலால், சரண சரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்பிற்கு மனு தாக்கல் செய்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.

செப்டம்பர் 29-ம் தேதி ஹெச்.ராஜாவுக்கு 60 வயது பூர்த்தியாகிறது. இந்த விழாவை விமரிசையாக கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள். இதனை முன்னிட்டு, செப்டம்பர் 27-ம் தேதி மணிவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விழாவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஹெச்.ராஜா அழைப்பு விடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bjp Mk Stalin Dmk H Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment