Advertisment

மு.க.அழகிரி பெயரை உச்சரித்த ஸ்டாலின்: மறுபடியும் இணக்கம் வருமா?

முதல்வரான பிறகு, மு.க.ஸ்டாலின் தனது மூத்த சகோதரர் மு.க.அழகிரியின் பெயரை உச்சரித்திருப்பதால் இருவருக்கும் இடையே மீண்டும் இணக்கம் வருமா என்ற கேள்விகள் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

author-image
WebDesk
New Update
MK Stalin pronounce his brother MK Alagri name, cm mk stalin, stalin alagiri as possible come to close, முக அழகிரி பெயரை உச்சரித்த ஸ்டாலின், முக ஸ்டாலின் முக அழகிரி இடையே மறுபடியும் இணக்கம் வருமா, திமுக, dmk, mk stalin, mk alagiri

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, மு.க.ஸ்டாலின் தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், தனது சகோதரர் மு.க.அழகிரி பெயரைக் குறிப்பிட்டார். அதற்கு பிறகு, சென்னை தேனாம்பேட்டையில் நடந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட பூச்சி முருகனின் மகள் திருமண விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மூத்த சகோதரர் மு.க.அழகிரியின் பெயரை உச்சரித்திருக்கிறார்.

Advertisment

2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதும், அவருடைய மூத்த சகோதரர் மு.க.அழகிரியும் சந்திப்பார்கள் என்று திமுக தொண்டர்கள் மற்றும் அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், இருவரின் சந்திப்பு நடைபெறவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட பூச்சி முருகனின் மகள் திருமண விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. திருமண விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மூத்த சகோதரர் மு.க.அழகிரியின் பெயரை உச்சரித்திருக்கிறார்.

திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், அவருடைய குடும்பத்தில் மு.க. அழகிரி, தமிழரசு என தமிழில்தான் பெயர் வைக்கப்பட்டது என்று கூறினார்.

மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் சில ஆண்டுகளாக விலகி இருந்துவரும் நிலையில், இந்த திருமண விழாவில் தனது அண்ணன் மு.க.அழகிரியின் பெயரை ஸ்டாலின் உச்சரித்தார். இருவரும் விலகி இருக்கும் சூழலில், மு.க.ஸ்டாலின் பொதுவில் அழகிரி பற்றி பேசுவது இது 2வது முறை.

திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு பிறகு, அவருடைய மகன் மு.க. ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டதால் மூத்த மகன் மு.க.அழகிரி ஆட்சேபித்ததால், அவர் 2014ம் ஆண்டு கருணாநிதியால் கட்சியில் நீக்கப்பட்டார்.

ஆனாலும், குடும்பத்தினர், மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பதற்காக கருணாநிதியிடம் நிறைய பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் அதற்கு கருணாநிதி மறுத்துவிட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியானது.

கருணாநிதி மறைந்த பிறகு, திமுகவில் மு.க.ஸ்டாலினின் தலைமை உறுதியானது. திமுகவில் மு.க.அழகிரி இணைய மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. ஆனால், மு.க. அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தார். திமுகவில் ஸ்டாலின் தலைமையை விமர்சித்து வந்தார். அழகிரி புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்தது. மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சரானார். மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியேற்புக்கு மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலின் நல்லாட்சி தருவார், தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று வாழ்த்தினார். பதவியேற்பு விழாவில், கொரோனா பாதிப்பு காரணமாக அழகிரி பங்கேற்க முடியவில்லை. ஆனால், அவருடைய மகன் துரை தயாநிதி பங்கேற்றார்.

இதனால், மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியானது. கடந்த ஆண்டு மே 21ம் தேதி மதுரையில் முதல்வர் ஸ்டாலின் மதுரை அரசு பணிகள் சம்பந்தமாக சென்றிருந்தார். அப்போது, இருவரும் சந்திக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. ஆனால், சந்திக்கவில்லை. அதற்கு பிறகு இருவரும் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதாக பேசப்பட்டாலும் சந்திப்பு நடக்கவில்லை.

இந்நிலையில்தான், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட பூச்சி முருகனின் மகள் திருமண விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. திருமண விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மூத்த சகோதரர் மு.க.அழகிரியின் பெயரை உச்சரித்திருக்கிறார். இதனால், சகோதரர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்கும் இணக்கம் வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மு.க. ஆகிரி, திமுகவில் இணைய வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அதனால்தான் புதிய கட்சியை தொடங்கும் முடிவையும் அவர் கைவிட்டதக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், அழகிரி திமுகவில் மீண்டும் நுழைவதற்கு திமுக தலைமை கிரீன் சிக்னல் காட்டவில்லை. இது மு.க.அழகிரிக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றனர். அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரர் மு.க.அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சியில் பொதுவில் அண்னன் அழகிரி பெயரை சொல்லி இருக்கலாம் என்று கூறுகின்றனர். இருப்பினும், தேர்தலுக்கு பின் முதல்வரான பிறகு, மு.க.ஸ்டாலின் தனது மூத்த சகோதரர் மு.க.அழகிரியின் பெயரை உச்சரித்திருப்பதால் இருவருக்கும் இடையே மீண்டும் இணக்கம் வருமா என்ற கேள்விகள் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

அதே நேரத்தில், மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், வருகிற நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட்டுகளையும் எதிர்பார்த்து வருகின்றனர். இதனால், சகோதரர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இணக்கம் ஏற்பட வேண்டும் என்று அழகிரி ஆதரவாளர்களும் விரும்புவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Dmk Mk Alagiri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment