Advertisment

திமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்: தொடரும் ஸ்டாலினின் அதிரடி!

திமுக மாவட்ட நிர்வாகிகள் அதிரடி நீக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்: தொடரும் ஸ்டாலினின் அதிரடி!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 2017 டிசம்பர் 21ம் தேதி நடந்தது. இதில், சுயேட்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் இழந்தார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மாவட்டம் வாரியாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். 3 மாதங்கள் நடந்த இந்த ஆய்வின்போது மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகரச் செயலாளர்கள் மீது சரமாரியாக புகார்கள் கூறப்பட்டன. ஆய்வுக் கூட்டத்தின்போது வைக்கப்பட்ட புகார் பெட்டியில் சுமார் 1 லட்சம் புகார்கள் குவிந்தன. இவற்றை ஆய்வு செய்ய தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சில அதிரடியான நடவடிக்கைகளை ஸ்டாலின் எடுத்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சில நிர்வாகிகளை நீக்கிய ஸ்டாலின், தற்போது மேலும் சில திமுக மாவட்ட நிர்வாகிகளை அதிரடியாக நீக்கியுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

Advertisment

மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை வடக்கு மாவட்டம்:

மேலூர் ஒன்றியக் கழக செயலாளர் வ.இரகுபதி  அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆர்.குமரன் மேலூர் ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாம்பட்டி ஒன்றியக் கழக செயலாளர் துரை.புகழேந்தி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எஸ்.கிருஷ்ணமூர்த்தி மேலூர் ஒன்றியக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை தெற்கு மாவட்டம்: 

செல்லம்பட்டி ஒன்றியக் கழக செயலாளர் கே.உக்கிரபாண்டி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சி.சுதாகரன் மேலூர் ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேடப்பட்டி ஒன்றியக் கழக செயலாளர் க.மூக்கையா அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஜே.ஜெயச்சந்திரன் சேடப்பட்டி ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருமங்கலம் நகர கழக செயலாளர் டி.நாகராஜன் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சி.முருகன் திருமங்கலம் நகர கழகப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம்:

பெரியகுளம் ஒன்றியக் கழக செயலாளர் எஸ்.போஸ் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எல்.எம்.பாண்டியன் பெரியகுளம் ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி ஒன்றியக் கழக செயலாளர் வி.இரத்தினசபாபதி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.சக்கரவர்த்தி தேனி ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சின்னமனூர் ஒன்றியக் கழக செயலாளர் சி.முருகேசன் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆர்.அண்ணாதுரை சின்னமனூர் ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தமபாளையம் ஒன்றியக் கழக செயலாளர் ஜி.குமரன் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அனைப்பட்டி முருகேசன் உத்தமபாளையம் ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கம்பம் நகர கழக செயலாளர் சிங்.செல்லபாண்டி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக டி.துரை நெப்போலியன் கம்பம் நகர கழகப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெரியகுளம் நகர கழக பொறுப்பாளர் எஸ்.அபுதாஹீர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எஸ்.பி.முரளி பெரியகுளம் நகர கழகப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

More Details awaited...

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment