Advertisment

யார் காலிலும் விழுந்து கேட்கவில்லை… நான் சாதாரண ஸ்டாலின் அல்ல; இ.பி.எஸ் விமர்சனத்துக்கு பதிலடி

நான் டெல்லிக்கு சென்று யார் காலிலும் விழுந்து எனக்கு இது செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MK Stalin, CM MK Stalin, Edappadi K Palaniswami, DMK, AIADMK, Stalin Delhi visit, நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, இபிஎஸ் விமர்சனத்துக்கு முக ஸ்டாலின் பதிலடி, ஸ்டாலின் டெல்லி பயணம், எடப்பாடி பழனிசாமி, MK Stalin retaliate to EPS, MK Stalin says I am not ordinary Stalin

நான் டெல்லிக்கு சென்று யார் காலிலும் விழுந்து எனக்கு இது செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் துபாய் பயணத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணத்தையும் அங்கே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்ததையும் இ.பி.எஸ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஸ்டாலினுக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்கவே டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார் என்று செய்திகள் வருகிறது. டெல்லி பயணம் குறித்து ஸ்டாலின் விளக்குவாரா என்று இ.பி.எஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின், நான் டெல்லிக்கு சென்று யார் காலிலும் விழுந்து எனக்கு இது செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “நான் துபாய்க்கு பல கோடி ரூபாயை எடுத்துசென்றதாக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதற்கு எனக்கு முன்பு இங்கு பேசியவர்களே பதில் சொல்லிவிட்டார்கள்.

அதேபோல், இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு மூன்று நாட்கள் சென்றிருந்தேன். அப்போது, நம் மாநிலத்திற்கு தேவையான கோரிக்கைகளை எல்லாம், பிரதமரிடத்திலும், அந்ததந்தத் துறை அமைச்சர்களிடத்திலும் வலியுறுத்தி, உரிமைக்கு குரல் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். இதனை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமலும், மூடிமறைக்கவும் சிலர், ஏதோ அச்சத்தின் காரணமாக, பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக்கொண்டு என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக டெல்லி சென்றேன் எனச் சொல்லிவருகிறார்கள்.

ஒன்றை மட்டும் நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். நான் அங்கு சென்று யார் காலிலும் விழுந்து ‘எனக்கு இது செய்து தாருங்கள்’ என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத் தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, பதவி ஏற்றபோதே சொன்னேன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’. கலைஞரின் மகன் என்றைக்கும் தமிழ்நாட்டிற்காக உழைப்பான்” என்று பேசினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Dmk Aiadmk Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment