Advertisment

ஆளுநரின் நடவடிக்கை இல்லை என்றால், ஜனாதிபதியை சந்திப்போம்: மு.க ஸ்டாலின்

ஆளுநர் உறுதியளித்துள்ளதாக தகவல் கிடைத்தது. எப்போதுமே, ஆளுநர் உறுதி கூறுவார், ஆனால் அந்த உறுதி நிறைவேற்றப்படுமா என்பது தான் கேள்விக்குறி.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK, MK Stalin, Tamilnadu police, Chennai police commissioner, TK Rajendran, DGP TK Rajendran, Walky-talky scam

முக ஸ்டாலின்

திமுக என்றுமே கொள்ளை புறமாக ஆட்சியைப் பிடிக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

திருவார் மாவட்டம் கொரடாச்சேரியில் திருமண விழா ஒன்றில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பேசும்போது: ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும் உங்களில் ஒருவராக இருக்கவே நான் விரும்புகிறேன். ஆட்சிக்கு வர வேண்டும், சிம்மாசனத்தில் அமர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இயக்கக்கம் உருவாக்கப்பட்டதல்ல. பொறுப்புகள் என்பதும், பதவிகள் என்பதும் மக்களுக்கு பணியாற்றுவதற்கு தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியில் இருந்து கொண்டு தான் தொண்டாற்றி வந்து கொண்டிருக்கிறோம்.

ஆட்சிக்கு வருவது வருங்காலம் வருங்காலம் என்று கூற வேண்டாம், இன்னும் ஒரு மாத காலம் என்று குறிப்பிட்டார். இந்த செய்தி தலைப்புச் செய்தியாக கூட வரலாம். நான் அவர்களுக்காக சொல்லவிரும்புவது என்னவென்றால், திமுக ஏதோ சூழ்ச்சி செய்வதாக சிலர் நினைக்கலாம். முன்னதாக நன்றியுரை ஆற்றிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு வார்தையை விட்டுவிட்டு போயிருக்கிறார். அவர் கூறும், எங்களுக்கே தெரியாமல் என்னனென்னமோ செய்வதாக குறிப்பிட்டார்.

அவர் சொன்ன காரணத்திற்காக தற்போது, நான் இதனை குறிப்பிட்டு பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன், நாங்கள் எதையும் செய்யவில்லை. மக்களின் ஆதரவை பெற்ற திமுக என்றுமே கொள்ளைப்புறமாக, ஆட்சியைப் பிடிக்க நினைக்காது.

அதிமுக அரசு கவிழத்தான் போகிறது. அதிமுக அரசு அவர்களாகவே கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இன்று காலையில், திமுக மற்றும் தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். அப்போது, ஆளுநர் உறுதியளித்துள்ளதாக தகவல் கிடைத்தது. எப்போதுமே, ஆளுநர் உறுதி கூறுவார், ஆனால் அந்த உறுதி நிறைவேற்றப்படுமா என்பது தான் கேள்விக்குறி.

அந்த உறுதி நிறைவேற்றப்படுமா என்பது தற்போது முக்கியமல்ல. ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அடுத்த கட்டமாக குடியரசுத் தலைவரை சந்திக்க வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும். அவ்வாறு சந்தித்தும் முடிவு கிடைக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை திமுக நாடும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். இது மிரட்டுவதற்காகவோ, அச்சுறுத்துவதற்காகவோ நான் கூறவில்லை. மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான்.

ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அவரது மறைவிற்கு பின்னர், அதிமுக-விற்குள் பதவிக்காக போட்டிகள் நடக்கின்றன. தற்போது, அவர்கள் மக்களுக்காக ஆட்சியில் அமர வேண்டும் நினைக்கவில்லை, கொள்ளையடித்ததை காப்பறவே அவ்வாறு போட்டியிடுகின்றனர்.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ஆகிவற்றிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மத்திய அரசிடம் மண்டியிடும் அரசாக தமிழக அரசு உள்ளது.

முன்னதாக கடந்த அதிமுக-வை சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை சந்தித்து, தற்போதைய முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று கடிதம் அளித்து வந்ததுள்ளனர். அந்த 19-பேருடன் நின்றுவிட்டார்களா என்றால், அந்த அணியுடன் எம்.எல்.ஏ-க்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் செய்திகள் வருகின்றன.

திமுக-வும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குட்காவை பயன்படுத்தினால் புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து உண்டு. இது தொடர்பாக கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே எழுப்பினேன். ஆதற்கு ஆதராம் என்பதற்கு, நான் மட்டுமல்ல பல சட்டமன்ற உறுப்பினர்கள் குட்காவை எடுத்து சட்டமன்றத்திலே காண்பித்தார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், ஜனநாகயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் அன்று அவ்வாறு சுட்டிக்காட்டினேன்.

அப்போதே இந்த நடவடிக்கை தவறு என்பதனை சுட்டிக்காட்டி, எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அதற்கான வாதத்திற்கு நாங்கள் தயார் என்று கூறியிருப்போம். ஆனால், 40 நாட்களுக்கு பிறகு, இப்போது நடவடிக்கை என்று கூறுகின்றனர்.

உரிமைக் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்றபோதிலும், எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு திமுக எம்.எல்.ஏ-க்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்துவிட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக உறுப்பினர்கள் குறைந்துவிடுவார்கள் என்பதே அவர்கள் திட்டம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அவ்வாறு நினைத்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பது நடக்காது என்று கூறினார்.

Mk Stalin Dmk Thiruvarur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment