தமிழகத்தில் அதிமுக-வின் ஆட்சி தானாகவே கவிழும்... மு.க ஸ்டாலின்

தமிழகத்தில் பால், அரிசி உள்ளிட்டவற்றில் கலப்படம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வவியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க திமுக ஈடுபடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், அதுபோன்ற நடவடிக்கைகளில் திமுக துளியும் ஈடுபடவில்லை. தமிழகத்தில் ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும்.

எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட பல்வேறு விஷயங்களில் அதிமுக-விற்குள் போட்டா போட்டி நிலவி வருகிறது. காந்தி குறித்து பாஜக தலைவர் கருத்து கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. தற்போது தமிழகத்தில் பால், அரிசி உள்ளிட்ட பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

×Close
×Close