Advertisment

சமூக அழுக்கை அகற்ற பரியன்கள் தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும் - முக ஸ்டாலின்

இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்திய படம் என ட்வீட்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பரியேறும் பெருமாள் முக ஸ்டாலின் வாழ்த்து, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், கதிர், கயல் ஆனந்தி

பரியேறும் பெருமாள் முக ஸ்டாலின் வாழ்த்து

சமீப காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு நிலையை பரவலாக மக்களிடையே கொண்டு செல்லும் பணியை பல்வேறு தரப்பட்ட கலைஞர்கள் தங்களின் கலை வடிவில் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படியாக சமீபத்தில் தமிழ் திரைப்பட உலகத்திற்கும், தமிழக மக்களுக்கும் அறிமுகமானவன் தான் இந்த பரியேறும் பெருமாள். மேலும் படிக்க பரியேறும் பெருமாள் படம் எப்படி இருக்கிறது?

Advertisment

குறைவான திரையரங்குகள், குறிப்பிட்ட நேர காட்சிகள் என பல்வேறு தடைகளைத் தாண்டியும் மக்கள் மனதில் பரியேறி அமர்ந்திருக்கிறது இந்த படம். திரையரங்கில் சென்று பார்வையிட்டு வரும் மக்கள் மனதில் நீங்காத இடத்தினை தக்க வைத்துவிட்டது மாரி செல்வராஜின் இந்த முதல் படைப்பு.

பரியேறும் பெருமாள் முக ஸ்டாலின் வாழ்த்து

இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்க, கதிர், கயல் ஆனந்தி என பல கலைஞர்களின் நடிப்பில் செப்டம்பர் 28ம் தேதி இந்த படம் வெளியானது. இந்த படத்தை தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் திரையரங்கில் சென்று பார்த்து ரசித்திருக்கிறார். மேலும் பா. ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ்ஜிற்கு வாழ்த்துகளை கூறியிருக்கிறார்.

Read More: உதயநிதி, மகேஷ் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து ட்வீட்கள்: பரியன் மீது பிரியம் ஏன்?

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்திய படம்” என்று ட்வீட் செய்து திரைப்பட குழுவிற்கு பாராட்டினை தெரிவித்திருக்கிறார்.

Mk Stalin Pa Ranjith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment