நாட்டின் எதிர்காலமாக விளங்கும் நமது குழந்தைகளின் உணர்வுகளை தற்கொலை நோக்கி தூண்டும் அபாயகரமான ‘ப்ளூ வேல் சேலஞ்ச்’ எனும் டிஜிட்டல் விளையாட்டை இணையத்தில் முடக்க வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: சமூக வலைதளங்களில் இலவசாமக கிடைக்கும் ‘ப்ளூ வேல்’ என்ற அபாயகரமான விளையாட்டால் நாட்டில்ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழ்நிலையை, தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்தங்களது கவனத்திற்கு கொண்டுவர இந்த கடிதத்தை எழுதுகிறேன். 50 சவால்கள் மூலம் இந்த உயிரைப்போக்கும் விளையாட்டு குழந்தைகளின் மனதை உணர்ச்சிகரமாக தூண்டிவிடுகிறது. இந்த 50 சவால்களில்,கடைசி சவால் அந்த விளையாட்டை உருவாக்கியவரின் வழிகாட்டுதலுடன் குழந்தைகளை தற்கொலைசெய்துகொள்ள தூண்டுகிறது.
இந்த நாட்டின் எதிர்காலமாக விளங்கும் குழந்தைகள் இந்த மோசமான சவால்கள் அடங்கியவிளையாட்டால் ஈர்க்கப்பட்டு, அவர்களுக்குள் தற்கொலை எண்ணங்களை தூண்டி விபரீத சம்பவங்கள்நிகழ காரணமாக அமைந்து விடுகிறது. தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றில்துவங்கி தற்கொலை செய்துக்கொள்ளுதல் போன்ற கடைசி சவாலால் குழந்தைகள் உயிரிழப்பதுமட்டுமின்றி பெற்றோர்களும் உறவினர்களும் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகிறார்கள்.ஏற்கனவே பல குழந்தைகள் இப்படி தங்களுக்கு தாங்களே காயம் ஏற்படுத்திக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விளையாட்டின் சவால்களை தொடர்ந்து விளையாடி, அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் மதுரையைசேர்ந்த விக்னேஷ் என்ற 19 வயது இளைஞரும், பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் படித்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சசிகுமார் பேரா என்ற முதலாமாண்டு மாணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு டிஜிட்டல் விளையாட்டு இளைஞர்களின்மனதில் உணர்ச்சிப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, இரக்கமின்றி அவர்களுடைய எதிர்கால கனவுகளை சிதைக்கிறது என்பது கடும் வேதனையை தருகிறது.
இந்த அபாயகரமான விளையாட்டுக்கான பதிவிறக்கசுட்டிகளை இணையத்தில் இருந்து உடனடியாக அகற்றுமாறு ஏற்கனவே இந்திய அரசு தொழில்நுட்பநிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தாலும், இன்னுமும் இந்த விளையாட்டு இணையத்தில்இருந்துகொண்டு அவர்களின் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை தங்களின்கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
ஆட்சியில் இருந்தபோது ததமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்திய திராவிடமுன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் என்ற முறையில், இந்த ‘அபாயகரமான விளையாட்டை’ சமூக வலைதளங்களில் உடனடியாக முடக்கி, நம் நாட்டின் எதிர்காலச் சிற்பிகளான குழந்தைகளை பாதுகாக்கவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
இணைய பயன்பாட்டாளர்கள் அதிகமுள்ள மாநிலம் என்றமுறையிலும், நம்முடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்திலும் இதுபோன்றுஆபத்துகள் நிறைந்த விபரீத விளையாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும்,உள்துறை அமைச்சகமும் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்தும் என நான் நம்புகிறேன் என கூறப்பட்டுள்ளது.