Advertisment

கொப்பரை கொள்முதல் விலையை கிலோ ரூ.150 ஆக உயர்த்த கோரிக்கை

கொப்பரை கொள்முதல் தொடர்பாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

author-image
WebDesk
New Update
MLA Pollachi Jayaraman request to increase the purchase price of coconut to Rs150 per kg

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கொப்பரை கொள்முதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில், “வெளிமார்க்கெட்டில் தேங்காய் மற்றும் கொப்பரை உயரும் வகையில் தமிழக அரசு செய்ய வேண்டும். கொப்பரை கொள்முதல் செய்ய ஒரு மாத காலம் தான் அவகாசம் உள்ளது.

இதனால், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்யாமல் கடந்த காலங்களைப் போல் அனைத்து முக்கியமான கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisment

மேலும், கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு அதற்குண்டான தொகையினை வாரம் ஒரு முறை காசோலை மூலம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் தனியாக USER ID வழங்க வேண்டும். கொப்பரை காண குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு கிலோவிற்கு 105.90"பைசாவில் இருந்து 150"ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment