மோடியின் வருகையால் மதியம் 3 வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.

சென்னையில் பிரதமர் மோடியின் வருகையால் காலை 11 மணி முதல் மதியம் 3 வரை அடையாறு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பொதுமக்கள் செல்லும் போக்குவரத்தில் மாற்றம்....

மாமல்லபுரத்தில் நடைபெறும் ராணுவ தடகள கண்காட்சி நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார். பின்ன ஹெலிகாப்ட மூலம் மாமல்லபுரம் செல்கிறார். இந்தப் பயணத்தில் பெரும்பாலும் ஹெலிகாப்டர் மூலமாகவே பயணிக்கிறார்.

ராணுவ நிகழ்ச்சிக்குப் பின்னர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவிற்கு ஐஐடி மைதானத்தில் ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்கி, அடையாறு மருத்துவமனைக்கு காரில் செல்கிறார். எனவே ஐஐடி-ல் இருந்து அடையாறு மற்றும் அடையாறில் இருந்து விமான நிலையம் வரை அனைத்துப் போக்குவரத்து பாதைகளும் மாற்றப்பட்டுள்ளது.

காலை 11 மணி முதல் மதியம் 3 வரை பாதை மாற்றத்தின் விவரங்கள்:

1. சின்னமலை வழியாக ராஜ் பவன் செல்ல தடை. மாறாக சைதாப்பேட்டை, நந்தனம் வழியாக மூப்பனார் பாலத்தைக் கடந்து திருவிக பாலம் வழியாக அடையாறு செல்லலாம்.
2. அடையாறில் இருந்து மத்திய கைலாஷ் வழியாகவும் ராஜ் பவன் பகுதிக்குச் செல்ல தடை. மாறாக டைடல் பார்க், எஸ் ஆர் பி டூல்ஸ், வேளச்சேரி வழியாக விமான நிலையம் செல்லலாம்.
3. மூப்பனார் பாலம் வழியாகக் காந்தி மண்டபம் செல்ல முழு தடை.
4. கிண்டி குழந்தைகள் பூங்கா மற்றும் அடையாறின் சுற்றுப் பகுதிகளில் பொழுதுபோக்கு இடங்கள் இன்று மூடல்.

இந்த மாற்றத்தினால் சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், மத்திய கைலாஷ், மூப்பனார் பாலம், டைடல் பார்க், வேளச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close