Advertisment

பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட எல்பின் நிறுவன அதிபர் கைது

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாட்டில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் எல்பின் நிதி நிறுவனம் (Elfin e -com private ltd) மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் ஆகியவை செயல்பட்டு வந்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட எல்பின் நிறுவன அதிபர் கைது

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாட்டில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் எல்பின் நிதி நிறுவனம் (Elfin e -com private ltd) மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் ஆகியவை செயல்பட்டு வந்தன. இவற்றின் மீது பல்வேறு மோசடி புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன. வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரணையும் நடத்தியுள்ளனர்.

Advertisment

இந்த ELFIN என்ற நிறுவனம் பண இரட்டிப்பு மற்றும் நிலம் தருவதாக பல்வேறு பொய் அலங்கார வெற்று வாக்குறுதிகள் வழங்கி அதிக லாபம் தருவதாக பொதுமக்களிடம் கூறி, பொது மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றி ELFIN E-Com Pvt Ltd, Sparrow Global Trade Trichy, Varagamani Pvt., Chennnai, JB Orient Tech Marketing India Pvt Ltd., Madural, RM Wealth Creation Pvt Ltd., Coimbatore and Infy Galaxy Marketing India Pvt Ltd., Chennai மற்றும் இதைச் சார்ந்த அறம் மக்கள் நல சங்கம் டிரஸ்ட், அறம் டிவி சேனல், தமிழ் ராஜ்ஜியம் செய்தித்தாள் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் முதலீடு செய்த பணத்தை இந்த நிறுவனங்களின் அதிபர்களே எடுத்துக் கொண்டதாகவும் இவர்களுக்கு எதிராக திருச்சி, தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதநகர், பெரம்பலூர், கோயம்புத்தூர், சென்னை ஆகிய 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வழக்குகள் கடந்த பல்வேறு காலகட்டங்களில் பதியப்பட்டிருந்தன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின் பேரில் காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கனம் கூடுதல் இயக்குனர் அபின் தினேஷ் மொடக்  உத்தரவின் பேரில் இவ்வழக்குகளில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ELFIN நிறுவன Managing Director ரமேஷ்குமார் என்பவரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன் கார்த்திக்குமார் தலைமையில் இயங்கிவந்த சிறப்பு புலனாய்வு குழுவின் புலன் விசாரணை ஆய்வாளர் குணசேகரன் மற்றும் ஆய்வாளர்கள் ஜான் கென்னடி, பெரியய்யா, ஞானசுமதி மற்றும் உதவி ஆய்வாளர்கள் இளங்கோவன், மகாலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணசாமி, செல்வகுமார், சந்திரபிரகாஷ், கோபாலகிருஷ்ணன் ஆகியோரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நீதித்துறை சிறப்பு நீதிபதி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலபாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

மேற்படி நிதி மோசடி வழக்கு எதிரி ரமேஸ்குமாரை நீதித்துறை சிறப்பு நீதிபதி உத்தரவின் பேரில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment