தனது நிழலாக இருந்த முரசொலி மாறனின் பிரிவு.. துக்கத்தில் தேம்பி அழுத கருணாநிதி!

கலைஞர் அடுத்தக்கணமே மருத்துவமனைக்கு விரைந்தார்.

முரசொலி மாறன் பிரிவு :

கருணாநிதி தனது கண்னின் கருவிழி என்று அழைத்தது ஒருவரைத்தான். அவர்  வேற யாருமில்லை  கருணாநிதியின் மருமகான முரசொலி மாறன். கருணாநிதியின் மறு வடிவம் என்று திமுக   தொண்டர்களால் அழைக்கப்பட்டவர்  முரசொலி மாறன்.

அரசியலில் தொடங்கி கட்சி, கூட்டணி என அனைத்திலும் கருணாநிதி அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்பது முரசொலி மாறனுக்கு தெரியும்.  அந்த அளவுக்கு  கருணாநிதியின் எண்ணமாகவு,ம் நிழலாகவும் திகழ்ந்தார் முரசொலி மாறன்.

திமுக நிர்வாகிகள் பலரும்  முரசொலி மாறனை செல்லமாக  கருணாநிதியின் மனசாட்சி என்று தான் அழைப்பார்கள்.  திமுகவின் அரசியல் தேசிய அளவிலும், சர்வதேச அரங்கிலும் உயர்ந்திட மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார் முரசொலி மாறன்.

ஒருமுறை தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அவரின் உரையை கேட்டு மெய் மறந்த கருணாநிதி, முரசொலி மாறனை கட்டி அணைத்து பாராட்டினார்.  அதன்  பின்பு தான் கருணாநிதி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிழலாக முரசொலி மாறன் உருவெடுத்தார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக  முரசொலி மாறன் காலமானர்.  மாறனின் மரணத்தின் போது  கருணாநிதி அவருடன் இருந்தார்.  மாறனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி தெரிந்ததும் கலைஞர் அடுத்தக்கணமே மருத்துவமனைக்கு விரைந்தார்.

முரசொலி மாறன் பிரிவு

கருணாநிதியுடன் முரசொலி மாறன்

மாறன் மரணமடைந்ததும், கருணாநிதி மருத்துவமனையிலியே  கண்ணீர் விட்டு அழுதார்.  முதலில் முரசொலி மாறனின் உடல்  அவரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பின்பு இரவு 9 மணிக்கு மேல் தான் கருணாநிதியின் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.  அதுவரை மாறனின் உடலுக்கு அருகில் கருணாநிதி அமர்ந்திருந்தார்.

முரசொலி மாறனின் பிரிவுக்கு பிறகு கருணாநிதி மனதளவிலும், உடல் அளவிலும் பலவீனம் ஆனார். கருணாநிதியின் உடல்நிலை சற்று மோசமானது. முரசொலி மாறனின் பிரிவு தான் கருணாநிதியை இந்த நிலையில் தள்ளிவிட்டது என்று திமுக தொண்டர்கள் பலர் வருத்தப்பட்டனர்.  மாறனின் மறைவு கருணாநிதியின் நெஞ்சில் இடி போல் விழுந்தது.

அதன் பின்பு கருணாநிதி அளித்த பல பேட்டியில் அவரால் மறக்க முடியாத மரணம் என்று முரசொலி மாறனின் மரணத்தை தான் குறிப்பிடுவார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close