சீமானை வெட்டி விடுவோம்… எச்சரித்த காங்கிரஸ்; போலீசில் நாம் தமிழர் புகார்

தொடர்ந்து காங்கிரஸ்காரர்களை விமர்சித்து வரும் சீமானை வெட்டிவிடுவோம் நாக்கை அறுத்து விடுவேன் என்று விமர்சித்த வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் மீது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமானை வெட்டிடுவோம் என்று கடுமையாக எச்சரித்த வட சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரவியம் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து திரவியம் மீது நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை புகழ்ந்தும் தாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் என்று கூறியும் வருகிறார்கள். அதோடு, காங்கிரஸ் கட்சியினரை சீண்டும் வகையில் பேசி விமர்சித்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் அக்கட்சி நிர்வாகிகளும் காங்கிரஸ்காரர்களை தொடர்ந்து விமர்சித்து வருவதால் காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அண்மையில், காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் தலைமையில் கோபண்ணா உள்ளிட்டோர் டி.ஜி.பி.யிடம் சீமானை கைது செய்யக் கோரி புகார் அளித்தனர்.

இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் ந்நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் முன்னிலையில் பேசிய சாட்டை துரைமுருகன், “நீங்கள் கருணாநிதி, அண்ணாதுரையிடம் படித்து வளர்ந்தவர்கள், நாங்கள் தலைவர் பிரபாகரனை படித்து வளர்ந்த பிள்ளைகள். பெரியார், கருணாநிதி பிள்ளைகளுக்கு பேச தெரியும், எழுத தெரியும். பிரபாகரன் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று காங்கிரஸ்காரர்களுக்கு தெரியும். ராகுல் காந்திக்கு தெரியும். சோனியா காந்திக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமில்லை. உங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்குமில்லை. அவ்வளவு தான்” என்று என்று எச்சரிக்கை விடுத்து பேசினார்.

காங்கிரஸ்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சாட்டை முருகன் பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சாட்டைதுரைமுருகன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சீமானையும் கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனறு காங்கிரஸ் கட்சி, தனது கூட்டணி கட்சியான திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தலைமையில் தண்டையார்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அருகே திங்கள்கிழமை மௌன விரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், பேசிய வட சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரவியம், காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமானை வெட்டி விடுவேன், நாக்கை அறுத்துவிடுவேன், தலையில்லா முண்டம் என கடுமையாக எச்சரித்து பேசினார். அதோடு, சீமான், சாதி ரீதியாக ஊருக்கு ஊர் ஒரு மாதிரி பேசுவதாகவும் திரவியம் கடுமையாக சாடினார்.

காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமானை வெட்டிடுவோம் என்று கடுமையாக எச்சரித்த வட சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரவியம் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து திரவியம் மீது நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் வடசென்னை தெற்கு மாவட்ட பொருளாளர் வெற்றி தமிழன் மற்றும் ஆர்கே நகர் தொகுதி செயலாளர் ஆனந்த் பாபு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த திரவியம் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் தொடர்ந்து காங்கிரஸ்காரர்களை விமர்சித்து வரும் நிலையில், சீமானை வெட்டிவிடுவோம் நாக்கை அறுத்து விடுவேன் என்று விமர்சித்த வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் மீது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Naam tamilar katchi functionaries gives police complaint on congress member who threatens seeman

Next Story
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்த விஜய் மன்ற நிர்வாகி: உள்ளாட்சி தேர்தல் சுவாரஸ்யங்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com