Nagaland asks land for govt house in Tamilnadu: தமிழகத்தில் நாகலாந்து இல்லம் கட்டுவதற்காக சென்னை மற்றும் வேலூரில் தமிழக அரசிடம் நாகலாந்து அரசு நிலம் கேட்டுள்ளது.
தமிழகத்தில் நாகலாந்து இல்லம் கட்டுவதற்காக இடம் வழங்க வேண்டும் என, நாகலாந்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் டோங்பாங் ஒசுகும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பின்போது, நாகலாந்து உள்துறை சிறப்பு செயலாளர் எஸ்.ஆர். சரவணன், நாகையில் பணியமர்த்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கே.தவசீலன் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
இந்த கோரிக்கை தமிழ்நாட்டில் வாழும் அல்லது வருகை தரும் நாகலாந்து மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக எழுந்துள்ளது. சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நாகலாந்தைச் சேர்ந்தவர்கள் படித்து வருகிறார்கள் அல்லது வணிக நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள். மேலும் நாகலாந்தில் இருந்து பலர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வேலூருக்கு வருகிறார்கள், என்று ஒரு அதிகாரி கூறினார்.
அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களும், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களும் சென்னையில் அரசு விருந்தினர் மாளிகைகளைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil