Advertisment

பொள்ளாச்சியை போல இன்னொரு ஆபாசக் குப்பை: குண்டர் சட்டத்தில் தள்ளப்பட்ட காசி

பொள்ளாச்சி சம்பவத்தை போல,இந்த சம்பவமும் நீர்த்துப்போகாமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே, இதுபோன்ற நபர்கள் குற்றம் செய்ய தயங்குவார்கள் என்பது பாமர மக்களின் எண்ணமாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காசிக்கு ஆதரவாக வாதிட மாட்டோம் - நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம்!

பொள்ளாச்சி சம்பவத்தின் வடு இன்னும் மறையாத நிலையில், பல பெண்களின் வாழ்க்கையை பாலியல் ரீதியாக சூறையாடியாது இல்லாமல், அவர்களிடம் பெருமளவில் பணம் பறித்து மோசடி செய்த நபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி.. வயது 26.. சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார்.. படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.. அப்பா நடத்தும் கோழிக்கடையை காசி கவனித்து வந்துள்ளார்.. ஆனால் இவர் படிக்கும்போதே பெண்களிடம் நெருங்கி பழகி உள்ளார்.

பெண்களை மாயவலையில் வீழ்த்தியது எப்படி?

மாலை கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவாராம்.. ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டு வந்துள்ளார். பெண்ணியம் குறித்த கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவிடம், இந்த கருத்துக்களை பார்த்து பல பெண்கள் காசியிடம் விழுந்துவிட்டனர்.. அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையும் எடுத்து வைத்துள்ளார். நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களையும் திருட்டுத்தனமாக எடுத்து வைத்து கொண்டு, நாளடைவில் பணம் கேட்டு அப்பெண்களை மிரட்டி வந்துள்ளார். இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்..

பணம் பறிப்பு

பிறகு தன்னுடைய அம்மாவுக்கு புற்றுநோய், பணம் மருந்து வாங்க வேண்டும் என்று கேட்டு லட்சக்கணக்கில் ஏமாற்றி உள்ளார். தற்போது காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் இன்னொரு மோசடியும் வெளியே வந்துள்ளது... பெண்களை ஏமாற்றியே காசி 4 அடுக்கு மாடி கொண்ட வீட்டை கட்டி உள்ளார்.. மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தில் தரைதளம், முதல் தளம் மட்டும் கட்டிக்கொள்ளலாம் என அனுமதி தரப்பட்டிருந்தது.. ஆனால் காசியோ, வீட்டின் முன்பகுதியையும் ஆக்கிரமித்து, தரைதளம், முதல்மாடி, 2-வது, 3-வது, 4-வது மாடி வரை கட்டி உள்ளார். இப்போது இதை இடிக்க நாகர்கோயில் மாநகராட்சி முடிவு செய்து அதற்கான நோட்டீஸையும் காசி வீட்டில் ஒட்டி உள்ளது.

புகார் : முதல்முறையாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் காசி குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் செய்யவும்தான் விஷயம் வெளியே வந்தது.

போலீஸ் விசாரணை

புகாரை தொடர்ந்து, கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.. இந்த விஷயத்தில் காசிக்கு 4 நண்பர்கள் உதவி செய்துள்ளனர்.. அவர்களையும் போலுசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.. சம்பந்தப்பட்ட நண்பர்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

அரசியல் தொடர்பு

அப்போதுதான் காசிக்கு சில அரசியல் பிரமுகர்களிடம் நெருக்கமும் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.. "காசியால் ஏமாந்த பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவர்களது ரகசியம் காக்கப்படும்" என மாவட்ட காவல்துறை அறிவிக்கவும் பாதிக்கப்பட்டோர் ஒவ்வொருவாக புகார் தந்து கொண்டுள்ளனர்.. இதையடுத்து 25 மதிக்கத்தக்க பெண் ஒரு என்ஜினியர் ஒருவர் புகார் தந்தார். இப்போது இன்னொரு பெண்ணும் புகார் அளித்துள்ளார்.. இந்த பெண்ணையும் காசி ஏமாற்றியுள்ளார்.

குண்டர் சட்டத்தில் கைது : இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணையை நடத்தி உண்மையை வெளிக்கொணரும் பொருட்டு, காசியை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி சம்பவத்தை போல,இந்த சம்பவமும் நீர்த்துப்போகாமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே, இதுபோன்ற நபர்கள் குற்றம் செய்ய தயங்குவார்கள் என்பது பாமர மக்களின் எண்ணமாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Goondas Act
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment