scorecardresearch

நீட் கோச்சிங்-கில் இத்தனை கோடிகள் குவிகிறதா? ஐடி ரெய்டில் சிக்கிய கிரீன்பார்க் பள்ளி

இந்த விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Namakkal private school neet exam center Income Tax department raid
Namakkal private school neet exam center Income Tax department raid

Namakkal private school neet exam center Income Tax department raid :  நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வருகிறது கிரீன்பார்க் என்ற தனியார் பள்ளி. இந்த பள்ளி நீட் எழுதும் மாணவர்களுக்காக தனியாக நாமக்கல், கரூர், பெருந்துறை, திருச்சி, சேலம்,மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் வைத்து நடத்தி வருகிறது. இந்த மையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் பயிற்சியை பெற்று வருகிறார்கள்.

நீட் தேர்வுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட இங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்றும் அதற்கான கணக்குகள் வருமான வரித்துறையினருக்கு சமர்பிக்கப்படுவதில்லை என்றும் வருமான வரித்துறையினருக்கு புகார் சென்றுள்ளது. இந்த புகாரைத் தொடர்ந்து கடந்த 11ம் தேதியில் இருந்து இந்த பள்ளி, இந்த பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்படும் நீட் பயிற்சி மையங்கள், நிர்வாகிகளின் இல்லங்கள் என அனைத்த்து பகுதிகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

நீட் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரசீதுகள் முறைப்படி வழங்கவில்லை என்றும், கணக்கில் வராத சொத்து மதிப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லாக்கர்கள் மற்றும் கலையரங்கில் ரூ. 30 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. பள்ளியில் தாளாளர், இயக்குநர்கள், நிர்வாகிகள் என அனைவரிடமும் நான்காவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க : நாமக்கல் தனியார் கல்வி நிறுவனத்தில், வருமான வரித்துறை சோதனை – 30 கோடி ரூபாய் பறிமுதல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Namakkal private school neet exam center income tax department raid continues for the fourth day