Advertisment

புதுச்சேரியில் நம்ம பாண்டி கிளீன் திட்டம் அறிமுகம்

கீப் திட்டம் - குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் இருக்கவும் மற்றும் பொறுப்பான திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சுமார் 75 நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NaNamma Pondy Clean Project

புதுச்சேரியில் நம்ம பாண்டி கிளீன் திட்டம்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பாண்டிச்சேரி நகராட்சி மற்றும் ஸ்வச்தா கார்ப்பரேஷன் இணைந்து, நம்ம பாண்டி கிளீன் திட்டத்தின் மூலம்  தொடர் சிறப்பு முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த திட்டத்தின் மூலம் , கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் பெருநிறுவன  சமூகப் பொறுப்பின் (CSR)  நிதியின் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடபட்டுள்ளது . பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல் இருத்தல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை நகரம் முழுவதும் ஏற்படுத்தப்படும் இத்திட்டம் ரீ சிட்டி நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் , கீப் நம்ம பாண்டி கிளீன் யின் முன்முயற்சியின் கீழ், பாண்டிச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்வுகள், சமுதாய ஒருகிணைப்பாளர் சந்திப்புகள் மற்றும் கூட்டங்கள்  ஏற்பாடு செய்யப்படும், மேலும் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் மற்றும் சுகாதாரா பணியாளர்கள்,முறை சாரா பணியாளர்களுக்கு   மருத்துவ முகாம்கள், தொழில்சார் அடையாள அட்டை விநியோகம், அரசாங்கத்தில் திட்டங்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் . சுகாதாரம், பணியிடப் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிதி மேலாண்மை  தொடர்பான  பயிற்சிகளும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும்.

publive-image

திட்டமிடப்பட்ட இந்த 75 நிகழ்ச்சிகள்  ராக் கடற்கரையில் " Love for Litter Bins "என்ற மிக பெரிய நிகழ்ச்சியுடன்  தொடங்கப்பட்டுள்ளது , இது கடற்கரையில் வரும் பார்வையாளர்களை பொது இடங்களில் குப்பைகளை போட கூடாது மற்றும் பிளாஸ்டிக் உபயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இந்த மிக பெரிய நிகழ்வில்  தூய்மைப் பேரணி, துப்புரவுப் பேரணி, விழிப்புணர்வு போட்டிகள்,குடியிருப்புவாசிகளுக்கு  விழிப்புணர்வு ,பள்ளிக் குழந்தைகளுக்கு  விழிப்புணர்வு , மார்க்கெட் சங்கங்கள்  விழிப்புணர்வு , தூய்மை பணியாளர்களுக்கு   விழிப்புணர்வு , உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  விழிப்புணர்வு , நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்  விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படயுள்ளது.நமது தூய்மை  பணியாளர்களின் பொருளாதாரப் பின்னடைவை மேம்படுத்துவதும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் இந்த ஆண்டு முழுவதும் நடைபெற உள்ளது.

கீப் திட்டம்  என்பது பாண்டிச்சேரியில் ஒரு நாளைக்கு 140 டன் கழிவுகளை அறிவியல் ரீதியாக நிர்வகித்து , 405 சுகாதார பணியாளர்களை தொழில்முறையாக்குதல் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்குள் ஒரு நிலையான குப்பை இல்லா சுமுகத்தை அடைவதற்கான நோக்கத்தை கொண்ட திட்டம் ஆகும். கீப்  திட்டம் மூலம் சுகாதார பூங்கா எனும்  உலர் குப்பை  சேகரிப்பு மையம் வம்பகீரபாளையத்தில் அமைக்கப்பட்டு தினமும் 4 டன் உலர் குப்பைகளை  சுகாதாரமாக அகற்றி மறுசுழற்சி செய்வதை உறுதி செய்கிறது.

கீப் திட்டத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்து உள்ளாட்சி துறையின் இயக்குனர் ரவிதீப் சிங் சாஹர் கருத்து தெரிவிக்கையில், பாண்டிச்சேரி  கடற்கரை  நகரின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். 75 வருட சுதந்திரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்வச் பாரத் திட்டம் , கீப் திட்டத்தின்  " Love for Litter Bins " என்ற முயற்சியின் மூலம் பாண்டிச்சேரி தூய்மையாக  பாதுகாக்கப்படும்  மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான மத்திய அரசின் உத்தரவுகளை தீவிரமாக செயல்படுத்தப்படும் என்ற செய்தியையும் கொண்டு செல்கிறது . பாண்டிச்சேரியின்  சுற்றுச்சூழலை  பாதுகாக்கவும் மற்றும்  இல்ல நகரமாக மாற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மற்றும் இவர்களின் முயற்சிகளுக்கு எங்களது முழு ஆதரவையும் அளிக்கிறோம்' என்றார்.

publive-image

திட்ட ஒருங்கிணைப்பாளர்  நந்தகுமார், கீப் திட்டம்   "தென்னிந்தியாவில் ராக் பீச்சின் புகழ்பெற்றது, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. இந்த திட்டம் கடற்கரைக்கு வரும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். குப்பைத் தொட்டிகளை மாற்றியமைத்து, தொட்டிகள் வர்ணம் பூசப்பட்டு, பெரிய சிவப்பு நிற இதயங்களைத் நிறுவப்பட்டுள்ளதால் இது மக்களின் கவனத்தை ஈர்க்கும். கடல் வளத்தை பாதுகாக்கவும் ,குப்பைகளை கண்ட இடத்தில் வீசாமல் இருப்பதற்கும் ,குப்பை தொட்டிகளைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும் இது வழி வகுக்கும்  . கவர்ச்சிகரமான விழிப்புணர்வு பதாகைகள் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து கடற்கரையானது பாதுகாக்கப்படும். இதன் வாயிலாக மக்களிடையே பிளாஸ்டிக் உபயோகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் CSR & Sustainability தலைவர் காயத்ரி திவேச்சா கூறுகையில், "கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகளில், பிளாஸ்டிக் கழிவுகளை திறம்பட நிர்வகிக்கும் உலகத்தை உருவாக்க நாங்கள் இடைவிடாமல் உழைத்து வருகிறோம்,. ப்ராஜெக்ட் கீப் இன் தனித்துவமான நம்ம பாண்டி கிளீன் திட்டத்தின் மூலம் பாண்டிச்சேரியில் நகராட்சியுடன் இணைந்து முறையான பிளாஸ்டிக் மேலாண்மை வாயிலாக சுத்தமான உலகத்தை உருவாக்கும் இந்த முயற்சியில் இணைந்து உள்ளோம் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

கீப் திட்டம் பற்றி,

கீப் ' என்பது கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகளால் ஆதரிக்கப்படும் ஒரு முயற்சியாகும், மேலும் புதுச்சேரியியை திடக்கழிவு மேலாண்மைக்கான மாதிரி நகரமாக உருவாக்கி, அதை நாட்டின் தூய்மையான கடற்கரை நகரங்களில் ஒன்றாக மாற்றுவதற்கு ரீ சிட்டி பிரைவேட் நெட்வொர்க்கால் செயல்படுத்தப்பட்டு வருகிறது . ஒவ்வொரு நாளும் குப்பை கிடங்கிற்கு செல்லும் 170 மெட்ரிக் டன் குப்பைகளை  குப்பைமேட்டிருக்கு செல்லாத வண்ணமும் , நகரத்தில் பணிபுரியும் 400 க்கும் மேற்பட்ட சுகாதார  பணியாளர்களை தொழில்முறையாக்கவும் இந்த திட்டம் உறுதிபூண்டுள்ளது.

நம்ம பாண்டிச்சேரி நகரத்தை இந்தியாவின் தூய்மையான கடற்கரை நகரங்களில் ஒன்றாக மாற்ற நடவடிக்கை எடுக்க முன்னோட்டமாக இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் , சுகாதார பணியாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள்  உட்பட அனைத்து தரப்பினர் மூலம் குப்பைகளை தரம் பிரித்தெடுத்தல் மற்றும் குப்பைகளை பொது வெளியில் கொட்டாமல் இருப்பதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment