Advertisment

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு: யார் இந்த ரூபி மனோகரன்?

Nanguneri byelection : நாங்குநேரி இடைத்தேர்தல், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுவார் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu, by election, tamil nadu byelection, vikkiravandi, nanguneri, dmk, admk, congress, makkal needhi maiam

tamil nadu, by election, tamil nadu byelection, vikkiravandi, nanguneri, dmk, admk, congress, makkal needhi maiam, இடைத்தேர்தல், விக்கிரவாண்டி, நாங்குநேரி, திமுக, அதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம்

Nanguneri byelection Congress candidate : நாங்குநேரி இடைத்தேர்தல், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுவார் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் களம் காண்கின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்த தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளன.

விக்கிரவாண்டியில திமுகவும், நாங்குநேரி தொகுதியை, திமுக, தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு விட்டுக்கொடுத்தது. இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதிமுக வேட்பாளர்கள்

விக்கிரவாண்டி - முத்தமிழ்ச்செல்வன்

நாங்குநேரி - நாராயணசாமி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க திணறிக்கொண்டிருந்தது. குமரி அனந்தன் உள்ளிட்டோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பாளர் தேர்வில் உள்ளூர் பிரமுகர்கள் போர்க்கொடி உயர்த்திக்கொண்டிருக்க, நேற்று ( 27ம் தேதி) காங்கிரஸ் தலைமை, ரூபி மனோகரனை, வேட்பாளராக அறிவித்தது.

ரூபி மனோகரன் பயோடேட்டா

தொழிலதிபர் ரூபி மனோகரன் , ரூபி பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்திவந்தார். இவரது அலுவலகங்கள் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கிவருகின்றன. தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் அணி ஒன்றின் உரிமையாளராக உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Dmk Aiadmk All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment