ஹாய் பிரெண்ட்ஸ், வேலன்டைன்ஸ் டே கொண்டாட்டத்துல இருக்கீங்களா, நல்லபடியா என்சாய் பண்ணுங்க.
வாங்க, நாம இன்னயோட நிகழ்ச்சிக்கு போவோம்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன், இணைந்து பணியாற்ற, திறமையான பெண்கள் மற்றும் ஆண்களை தேர்வு செய்து, பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. . விண்வெளி வீரர்களாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நபர்களுக்கான நேரம் இது. தகுதியுள்ள அமெரிக்கர்கள், மார்ச், 2ம் தேதி முதல், விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, இரண்டு மணி நேர, ‘ஆன்லைன்’ தேர்வு இருக்கும். அந்த தேர்வை எழுதுவோரில் இருந்து, அடுத்தகட்ட ஆராய்ச்சியாளர்கள், 2021ன் மத்தியில், தேர்வு செய்யப்படுவர். அதில் தேர்வானோருக்கு, டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு, பயிற்சிகள் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, 38 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வரவேற்கிறது நாசா
சீனாவில் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள ‘கொரோனா ‘ என்ற கொடிய வைரஸ் சீனாவில் துவங்கி ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 42,200 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப்போகுதோ…
லண்டன் சுரங்க ரயில்பாதையில், சண்டையிட்டுக் கொள்ளும் எலிகள் புகைப்படம், 2019ம் ஆண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. சாம் ரோவ்லி என்ற புகைப்படக் கலைஞர் இந்த விருதை வென்றுள்ளார். லண்டன் சுரங்க பாதையில், ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில், இரு எலிகள், உணவுக்காக சண்டையிடும் அப்புகைப்படம், ஆன்லைனில் நடத்தப்பட்ட ஓட்டுக்கள் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இப்புகைப்படம், மே 31, 2020 வரை மியூசியத்தில், வைக்கப்பட உள்ளது.
வாழ்த்துக்கள்…
விஜய், ரம்பா நடிப்பில் 1999ம் ஆண்டு உருவான மின்சார கண்ணா படத்தின் காப்பியே , தற்போது ஆஸ்கார் விருது வென்றுள்ள பாரசைட் படம் என்று சமூகவலைதளங்களில் தகவல் பரவ, இந்திய படங்கள் அதிகளவில், ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டு இருப்பதாக திரைப்பட வரலாற்று ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஈ.டி. என்ற படம், சத்யஜித்ரே வங்காள மொழியில் எழுதி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கதையின் அப்பட்டமான காப்பி. அதேபோல், ஸ்டார்வார்ஸ் படம், ராமாயணத்தை தழுவிதான் எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil