Advertisment

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு

NCRB report on crime rate: தேசிய அளவில் இந்திய தண்டனைச் சட்டத்தில்  பதிவான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டைவிட 2017 ஆம் ஆண்டில் 3.6 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை 1.05 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NCRB report on crime rate, NCRB report 2019, NCRB report 2016, NCRB report 2017, NCRB report on crime rate, SC ST act, POCSO, தேசிய குற்ற ஆவணக் காப்பகம், என்.சி.ஆர்.பி, தமிழ்நாடு, தமிழகத்தில் குற்ற வழக்குகள் குறைவு, என்.சி.ஆர்.பி அறிக்கை 2017, crime rate against children, Tamilnadu, Uttar Pradesh, Bihar, Maharashtra, Assam, crime rate decreased in Tamil Nadu, NCRB

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி, நாடு முழுவதும் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் 2016 ஆம் ஆண்டில் 48,31,515 வழக்குகளும் 2017 ஆம் ஆண்டில் 50,07,044 வழக்குகளும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டில் 1,79,896 வழக்குகளும் 2017 ஆம் ஆண்டில் 1,78,836 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இதன் மூலம் நாடு முழுவதும் பதிவான குற்ற வழக்குகளின் சதவீதம் 2016 ஆம் ஆண்டைவிட 2017 ஆம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 3.6 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் குற்ற வழக்குகள் பதிவு 1.05 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

தேசிய அளைவில் பதிவான மொத்த குற்ற வழக்குகளில் தமிழகத்திலிருந்து பதிவான குற்ற வழக்குகளின் பங்கு 5.8% ஆகும். உத்தரப்பிரதேசத்தில் பதிவான குற்றவழக்குகளின் பங்கு 10.1% என நாட்டிலேயே அதிக குற்ற வழக்குகள் பதிவான மாநிலமாக உள்ளது.

தமிழகத்தில் டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா, பீகார் ஆகிய மாநிலங்களைவிட குறைவாக குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை 4.03 லட்சத்தில் இருந்து 4.12 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் 13,201-இல் இருந்து 10,358 ஆக குறைந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் ஆள் கடத்தல் மற்றும் கடத்தல் வழக்குகள் 2016 ஆம் ஆண்டில் 95,893 வழக்குகளும் 2017-இல் 95,893 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இதன் மூலம் இந்தியாவில் கடத்தல் வழக்குகள் 9% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இது தமிழகத்தில் 1,223-இல் இருந்து 1027 வழக்குகள் பதிவாகி கடத்தல் வழக்குகள் குறைந்துள்ளது. கடத்தல் வழக்கில் தேசிய அளவில் தமிழகத்தில் பதிவான கடத்தல் வழக்குகளின் அளவு 1.1 சதவீதம் ஆகும். தேசிய அளவில் பதிவான மொத்த கடத்தல் வழக்குகளில் அஸ்சாமில் 8.2% கடத்தல் வழக்குகளும், பீகாரில் 8.8%, மகாராஷ்டிராவில் 10.8%, உத்தரப் பிரதேசத்தில் 20.8% கடத்தல் வழக்குகளும் பதிவாகி உள்ளன.

எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டுக்கும் 2017 ஆம் ஆண்டுக்கும் இடையில் 1738 வழக்குகளில் இருந்து 1362 வழக்காக குறைந்துள்ளது. இது தேசிய அளவில் பதிவான எஸ்.சி. எஸ்.டி மக்களுக்கு எதிரகா பதிவான வழக்குகளில் 3.2% ஆக உள்ளது. மேலும், தேசிய அளவில் பதிவான மொத்த எஸ்.சி, எஸ்.டி வழக்குகளில் உத்தரப் பிரதேசத்தில் 26.5%, பீகாரில் 15.6%, மதியப்பிரதேசத்தில் 13.6%, ராஜஸ்தானில் 9.8% வழக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் வழக்குப்பதிவு 2.7% ஆக உள்ளது. இதில் உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இரட்டை இலக்க சதவீதங்களில் இருப்பதை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மிகவும் குறைவு ஆகும்.

Tamilnadu Kerala Uttar Pradesh Madhya Pradesh Bihar Assam Ncrb
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment