Advertisment

வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்:  நிவாரணம் வழங்கிய வனத்துறையினர்

வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் இன்று காலை சுமார் 8.15 மணியளவில் மூதாட்டி கமலம் (வயது 59) என்பவரை தேயிலை கள எண் 7A -ல் தேயிலை பறிக்க சென்ற போது தேயிலை செடியினுள் இருந்த வந்த கரடி திடீரென தாக்கியதில் மூதாட்டி பலத்த காயம் ஏற்ப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்

கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்

வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில்  வாட்டர் பால்ஸ்  எஸ்டேட் பகுதியில் இன்று காலை சுமார் 8.15  மணியளவில் மூதாட்டி கமலம்  (வயது  59) என்பவரை தேயிலை கள எண் 7A -ல் தேயிலை பறிக்க சென்ற போது தேயிலை செடியினுள் இருந்த வந்த கரடி திடீரென தாக்கியதில் மூதாட்டி பலத்த காயம் ஏற்ப்பட்டது.

Advertisment

அருகில் இருந்த தொழிலாளர்கள்  சத்தம் போடவும் கரடி மூதாட்டியை விட்டு வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

publive-image

மூதாட்டியின் வலது கை மற்றும் தலையில் காயம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்க்க கவ தேஜா, உதவி வனப்பாதுகாவலர் செல்வம் வால்பாறை வனச்சரகர் ஜி.வெங்கடேஷ்  அரசு மருத்துவமனையில் கரடி தாக்கிய கமலத்துக்கு ஆறுதல் கூறி 

publive-image

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்  உடனடி நிவாரண நிதியாக ரூ.10000/- வழங்கினார். பட்டப்பகலில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

publive-image

செய்தி: பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment