Advertisment

சென்னை விஐடி கல்லூரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு!

வளாகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Covid 19

New Covid 19 cases at the VIT campus in Kelambakkam rose to 42 said state health department

சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில், மேலும் 42 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வளாகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் ஏப்ரல் முதல், கொரோனா கிளஸ்டரைப் புகாரளிக்கும் நான்காவது கல்வி நிறுவனம் இதுவாகும்.

இந்த புதிய எழுச்சி மூலம், சென்னையை (33) விஞ்சும் வகையில், செங்கல்பட்டு (46) புதிய பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டமாக மாறியுள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமை 89 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக மொத்த பாதிப்புகளில் 88%, சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பதிவாகி உள்ளன.

கோவை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் இரண்டு புதிய பாதிப்புகளும், திருநெல்வேலி மற்றும் திருவள்ளூரில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் திங்களன்று புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் விஐடி வளாகத்தில், திங்கள்கிழமை வரை 1,200க்கும் மேற்பட்ட மாணவர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் சாட்டுரேஷன் டெஸ்டிங் மூலம் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வளாகத்திற்கு வருகை தந்த சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தொற்றுநோயை விரைவில் கட்டுப்படுத்துவதும், பரவாமல் தடுப்பதும் அரசின் நோக்கமாகும்.

தரமான கிளஸ்டர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அறிகுறி உள்ளவர்கள் முதலில் பரிசோதிக்கப்படுவார்கள். இதைத் தொடர்ந்து அனைவருக்கும் சோதனைகள் நடத்தப்படும். நேர்மறை சோதனை செய்தவர்கள் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு லேசான தொற்று உள்ளது. ஆனால் ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார்.

ஐஐடி-எம் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரி போலவே, பல மாநிலங்களில் இருந்து மே 14 அன்று, மாணவர்கள் குழு ஒன்று, வளாகத்திற்கு வந்த பிறகு விஐடி வளாகத்தில் கிளஸ்டர் தொடங்கியது என்று தொற்றுநோயியல் கண்காணிப்பு கூறுகிறது.

காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்ட மாணவர் மே 21 அன்று கொரோனாவுக்கு நேர்மறை சோதனை செய்தார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மற்றும், இரண்டாம் நிலை தொடர்புகள் நேர்மறை சோதனை செய்துள்ளனர்," என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment