Advertisment

ஆவடியில் மிக பிரம்மாண்டமாய் உருவாகும் ஐ.டி. பார்க்... அனுமதி அளித்தது தமிழக அரசு!

காக்னிசண்ட் மற்றும் டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களை இந்த பூங்காவில் அமைக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
New Information Technology hub in Avadi

New Information Technology hub in Avadi

New Information Technology hub in Avadi  : 10 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாய் உருவாகிறது ஆவடியில் தொழில்நுட்பப் பூங்கா. 230 கோடி ரூபாய் மதிப்பளவில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

Advertisment

விரைவில் அந்த பகுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பப் பூங்கா ஆவடியில் உருவாக்கப்படுவதால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.

New Information Technology hub in Avadi

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த பணிகள் தொடங்கப்பட்டு 2021ம் ஆண்டிற்குள் நிறைவடையும்.  ஐந்து லட்சம் சதுர அடியில் கட்டப்படும் இந்த தொழில்நுட்ப வளாகத்தின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட பொறியியல் நிறுவனம் ஒன்றை நியமித்துள்ளனர். 30 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிவுற்ற பின்பு இங்கு அலுவலங்கள் செயல்பாட்டிற்கு வரும். இதன் மூலம் 30,000 நபர்கள் பயனடைவார்கள்.

வடக்கு மற்றும் மேற்கு சென்னையில் வசிப்பவர்களுக்கான புதிய வேலை வாய்ப்பினை அளிக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. காக்னிசண்ட் மற்றும் டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களை இந்த பூங்காவில் அமைக்க ஆர்வம் காட்டிவருகின்றனர் என அமைச்சர் கே. பாண்டியராஜன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : தமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த அமெரிக்க நிறுவனம்… 2.5 கோடி டாலர் அபராதம் செலுத்த உத்தரவு

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment