கோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்

Coimbatore – Pazhani new train service : கோவை – பழநி ரயில் சேவை, வாரத்தின் 7 நாட்களிலும் இயக்கப்பட உள்ளது.

train service, coimbatore, pazhani, pollachi, new train service, southern railway, piyush goyal, coimbatore - pollachi, coimbatore - pazhani, salem- karur
train service, coimbatore, pazhani, pollachi, new train service, southern railway, piyush goyal, coimbatore – pollachi, coimbatore – pazhani, salem- karur, தெற்கு ரயில்வே, சேலம் – கரூர் ரயில், கோவை – பொள்ளாச்சி ரயில், கோவை – பழநி ரயில்

கோவை – பழநி, கரூர் – கோவை மற்றும் கோவை – பொள்ளாச்சி வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகளை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், காணொலி காட்சி மூலம், இன்று (15ம் தேதி) துவக்கி வைக்கிறார். இந்த வழித்தடங்களில், ரயில் சேவை, நாளை (16ம் தேதி) இயக்கப்பட உள்ளது.

6 நாட்கள் ரயில் சேவை : சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி வழித்தடங்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

வாரத்தின் எல்லா நாட்களிலும் சேவை : கோவை – பழநி ரயில் சேவை, வாரத்தின் 7 நாட்களிலும் இயக்கப்பட உள்ளது.

பழநி – கோவை ரயில் விவரம்: பழநியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் ரயில், உடுமலையில் 11.32 மணிக்கும், பொள்ளாச்சியில் 12.20 மணிக்கும் வந்து சேரும. , கிணத்துக்கடவில் இருந்து 12.47க்கு புறப்படும் ரயில் போத்தனூரில் 1.25க்கு வரும். கோவைக்கு பகல் 2.10 மணிக்கு சென்றடையும்.

கோவை – பழநி ரயில் விவரம்: கோவையில் இருந்து பகல் 1.45 மணிக்கு புறப்படும் ரயில் போத்தனூரில் 1.57 மணிக்கும், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் பகல் 2.25 மணிக்கும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பிற்பகல் 3 மணிக்கும் புறப்படும். உடுமலைக்கு 3.45 மணிக்கும் பழனிக்கு மாலை 4.40க்கு சென்றடையும். இந்த ரயில், வாரத்தின் 7 நாட்களிலும் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: New train services inaugurates today

Next Story
தமிழ்நாடு அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அதிகபட்சம் ரூ.16,800 கிடைக்கும்Tamil Nadu News Today Live Updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X