Advertisment

கோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்

Coimbatore - Pazhani new train service : கோவை - பழநி ரயில் சேவை, வாரத்தின் 7 நாட்களிலும் இயக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
train service, coimbatore, pazhani, pollachi, new train service, southern railway, piyush goyal, coimbatore - pollachi, coimbatore - pazhani, salem- karur

train service, coimbatore, pazhani, pollachi, new train service, southern railway, piyush goyal, coimbatore - pollachi, coimbatore - pazhani, salem- karur, தெற்கு ரயில்வே, சேலம் - கரூர் ரயில், கோவை - பொள்ளாச்சி ரயில், கோவை - பழநி ரயில்

கோவை - பழநி, கரூர் - கோவை மற்றும் கோவை - பொள்ளாச்சி வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகளை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், காணொலி காட்சி மூலம், இன்று (15ம் தேதி) துவக்கி வைக்கிறார். இந்த வழித்தடங்களில், ரயில் சேவை, நாளை (16ம் தேதி) இயக்கப்பட உள்ளது.

Advertisment

6 நாட்கள் ரயில் சேவை : சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி வழித்தடங்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

வாரத்தின் எல்லா நாட்களிலும் சேவை : கோவை - பழநி ரயில் சேவை, வாரத்தின் 7 நாட்களிலும் இயக்கப்பட உள்ளது.

பழநி - கோவை ரயில் விவரம்: பழநியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் ரயில், உடுமலையில் 11.32 மணிக்கும், பொள்ளாச்சியில் 12.20 மணிக்கும் வந்து சேரும. , கிணத்துக்கடவில் இருந்து 12.47க்கு புறப்படும் ரயில் போத்தனூரில் 1.25க்கு வரும். கோவைக்கு பகல் 2.10 மணிக்கு சென்றடையும்.

கோவை - பழநி ரயில் விவரம்: கோவையில் இருந்து பகல் 1.45 மணிக்கு புறப்படும் ரயில் போத்தனூரில் 1.57 மணிக்கும், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் பகல் 2.25 மணிக்கும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பிற்பகல் 3 மணிக்கும் புறப்படும். உடுமலைக்கு 3.45 மணிக்கும் பழனிக்கு மாலை 4.40க்கு சென்றடையும். இந்த ரயில், வாரத்தின் 7 நாட்களிலும் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment