Advertisment

போதைப் பொருட்களை பயன்படுத்தும் நட்சத்திர விடுதிகளுக்கு சீல்: சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

2023ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தன்று, கடற்கரைகளை மக்கள் செல்ல தடை என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
போதைப் பொருட்களை பயன்படுத்தும் நட்சத்திர விடுதிகளுக்கு சீல்: சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

2023ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தன்று, கடற்கரைகளை மக்கள் செல்ல தடை என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் தேவையில்லாமல் மோட்டார் வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என்று மாநில காவல்துறை உயரதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.

publive-image

அப்போது அவர் கூறியதாவது, “பொதுமக்கள் புத்தாண்டை முன்னிட்டு மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது. இந்த புத்தாண்டு விபத்து ஏதேனும் நடைபெறாமல் கொண்டாடப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எலியடஸ் கடற்கரையில் (பெசன்ட் நகர்) இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ரோந்து வாகனங்களில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளப்படும்.

புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாக விடுதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். மொத்த இருக்கையில் 80 சதவீதத்திற்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

மது விற்பனை செய்யும் இடங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதிக்காமல் இருக்க, ஒவ்வொருவரின் அடையாள அட்டையை சோதனை செய்து அனுமதிக்க வேண்டும். நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ள வேண்டும். போதைப் பொருட்களை நட்சத்திர விடுதிகளில் பயன்படுத்தினால் சீல் வைக்கப்படும். உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் இன்று முதல் தொடர்ந்து விடுதிகளை ஆய்வு செய்வார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

டிசம்பர் 31 மற்றும் புத்தாண்டு தினத்தன்று, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு சுமார் ஒரு லட்சம் போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் கூடாது என்றும், இரண்டு நாட்களும் மக்கள் கடற்கரைக்கு அருகில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பண்டிகையை வீட்டில் குடும்பத்துடன் கொண்டாடவும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கவும் என்று தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு முழுவதும் இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதால், நீண்ட தூரம் பயணிப்பவர்கள் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒரு சிறிய இடைவெளி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வழிபாட்டுத் தளங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். மக்கள் வேறு ஊர்களுக்குச் செல்லும்போது, ​​பூட்டியிருக்கும் வீடுகளுக்குப் பாதுகாப்புத் தேவைப்பட்டால், குற்றச்செயல்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க உள்ளூர் காவல்துறையினரால் ரோந்து ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

அனைத்து பப்கள், ரிசார்ட்டுகளும் காவல்துறையால் வழங்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும், வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக பைக் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் யாரேனும் இருந்தால் 100க்கு டயல் செய்யுமாறும் மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

முன்னதாக, சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "தற்போதுள்ள கோவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகள், இதில் முகமூடி அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் ஆகியவை தொடர்ந்து நடைமுறையில் உள்ளன, மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றாலும், மக்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment