திணறிய மெரினா… சென்னை புத்தாண்டு கொண்டாட்டம் ஹைலைட்ஸ்

Chennai New year celebration 2020 : புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Happy New year 2020 wishes, Chennai new year celebration places
Happy New year 2020 wishes, Chennai new year celebration places

Happy New Year 2020 Wishes, New Year Eve Celebration In Chennai :  கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் உருவாக்கப்பட்டு பின்பற்றப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களும் விருந்துகளும் அதிகாலை 1 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்களுக்கு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அதில் மது வழங்குவதற்கான நேரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஹோட்டல் அல்லது ரிசார்ட்டுகளுக்கு வருபவர்கள் அனைவரும் முறையான அடையாளத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Happy New year 2020 wishes, Chennai new year celebration places

புத்தாண்டை முன்னிட்டு, சென்னை கடற்கரைச் சாலை, எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் வாகன போக்குவரத்து இரவு 8 மணிமுதல் மாற்றப்படுகிறது. “மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் புத்தாண்டு வரவை கொண்டாடுவதற்காக 31.12.2019, இரவு காமராஜர் சாலை மற்றும் பெசன்ட் நகர் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதை முன்னிட்டு,தடையில்லா வாகன போக்குவரத்து, விபத்தில்லா புத்தாண்டை உறுதிசெய்வதற்காக  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Live Blog

Chennai New Year Eve updates: புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.


22:09 (IST)31 Dec 2019

2020 புத்தாண்டு கொண்டாட்டம்; இரு சக்கர வாகனத்தில் மெரினாவில் குவிந்த மக்கள்

சென்னையில் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் இரு சக்கர வாகனத்தில் மெரினாவில் குவிந்து வருகின்றனர். ஏராளமானோர் இரு சக்கர வாகனத்தில் மெரினாவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதாலும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாத நிலை ஏற்படும் என்பதாலும் ஆர்.கே.சாலையில் டிஜிபி அலுவலகத்திற்கு முன்னதாகவே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. அதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு புத்தாண்டைக் கொண்டாட மெரினா கடற்கரைக்கு நடந்தே செல்கின்றனர்.

21:15 (IST)31 Dec 2019

2020 புத்தாண்டு கொண்டாட்டம்; மெரினாவில் மணலில் செல்லும் கார் மூலம் போலீசார் கண்காணிப்பு

2020 புத்தாண்டு கொண்டாட மக்கள் மெரினாவில் குவிந்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கடற்கரை மணலிலும் செல்லும் கார் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் யாரும் கடலுக்குள் செல்லாமல் தடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

20:49 (IST)31 Dec 2019

மெரினாவில் குவியும் மக்கள்; மகளிர் பாதுகாப்புக்காக காவல்துறை சிறப்பு நடவடிக்கை

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மக்கள் குவிந்து வருகின்றனர். மகளிரின் பாதுகாப்புக்காக போலீசார் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

19:02 (IST)31 Dec 2019

புத்தாண்டு கொண்டாட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் காவல்துறை எச்சரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுவரும் சூழலில், இன்று நள்ளிரவு 2020 புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏதேனும் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

17:16 (IST)31 Dec 2019

சென்னையில் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்; பாதுகாப்பு பணியில் 15,000 போலீஸ்

2020 புத்தாண்டையொட்டி சென்னையில் மெட்ரோ ரயில் அதிகாலை 1 மணி வரை இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

16:21 (IST)31 Dec 2019

புத்தாண்டு கொண்டாட்டம், சென்னையில் மேம்பாலங்கள் மூடல்

வரும் 2020ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை விபத்துகள் இல்லாத  வகையில் இருக்க  சென்னையில் உள்ள 38 பெரிய மேம்பாலங்களுடன் சேர்த்து மொத்தம் 75 மேம்பாலங்கள் மூடப்படுகின்றன என்று தமில்க்ஹா காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், இரவு  சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக சென்னையில் ‘அம்மா ரோந்து வாகனங்களும் இன்று இயக்கப்படுகின்றன.  

14:27 (IST)31 Dec 2019

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!
Most impressed films of 2019, magamuni

மகாமுனி : மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமாரின் இரண்டாவது படம் மகாமுனி. இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஆர்யா. வெகுநாட்கள் கழித்து சொல்லிக் கொள்ளும் படமாகவும் அவருக்கு அமைந்திருந்தது. த்ரில்லர் வகை திரைப்பட ரசிகர்களுக்கு பிடித்ததாக அமைந்திருந்தது.  

14:27 (IST)31 Dec 2019

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!
bakrid movie, most impressed films of 2019

பக்ரீத் : ஒட்டகத்தை வைத்து முதன்முறையாக ஒரு முழு நீள படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ஜெகதீசன் சுப்பு. விக்ராந்த்தின் குடும்பத்தில் ஒருவனாக ஒட்டகமும், அதன் மேல் அவர்கள் கொண்டிருந்த பாசப் பிணைப்பும் பார்வையாளர்களை கவர்ந்தன. விமர்சன ரீதியாக இந்த படம் சாதித்தாலும், வசூல் ரீதியாக சாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

14:26 (IST)31 Dec 2019

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!
most impressed films of 2019, oththa seuppu size 7

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ஒருவரே எழுதி இயக்கி நடித்து தயாரித்திருந்த  இந்தப் படம் உலகின் முதல் முயற்சியாக பார்க்கப்பட்டது. இந்தியாவின் மிக முக்கியமான முயற்சியாகவும் கவனிக்கப்பட்டது. இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே நடித்து சில படங்கள் வெளிவந்திருந்தாலும், நடிப்பவரே எழுதி இயக்கியிருந்தது இதுவே முதல் முறை. ஒருவராலேயே சொல்லப்பட்டாலும் திருப்பங்களும் முடிச்சுகளும் கதையை சுவாரசியமான திரைக்கதையாக மாற்ற சிறப்பாக உதவி புரிந்தன. 

14:25 (IST)31 Dec 2019

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!
most impressed films of 2019, nerkonda paarvai

எச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருந்தது. படத்தில் இடம்பெற்ற நோ மீன்ஸ் நோ வசனம், தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் நடித்ததற்காக அஜித்துக்கும் பாராட்டுகள் குவிந்தன. 

14:25 (IST)31 Dec 2019

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!
most impressed films of 2019, peranbu movie

பேரன்பு : தங்கமீன்கள் படத்திற்குப் பிறகு அப்பா – மகள் பாசத்தை மையப்படுத்தி வெளிவந்த இயக்குநர் ராமின் மற்றொரு படம் ‘பேரன்பு’. பிளாஸ்டிக் சைல்ட் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு மம்முட்டி, சாதானாவின் நடிப்பால் ரசிகர்களை உணர்வுகளால் தள்ளாட செய்தது. உலகளவில் இந்த படமும் பல விருதுகளை குவித்து வந்தாலும், தியேட்டர்களில் மிகப்பெரிய வசூலை ஈட்ட முடியாமல், விமர்சன ரீதியாக மட்டுமே இந்த படம் வெற்றிப் பெற்றது.

14:25 (IST)31 Dec 2019

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!
most impressed films of 2019, super deluxe

ஆரண்ய காண்டம் படத்தை இயக்கி விட்டு, 8 ஆண்டுகள் கழித்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா. விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் தமிழ் சினிமாவின் இத்தனையாண்டு ஃபார்முலாக்களை உடைத்தெரிந்தது. உலகளவில் பல விருதுகளையும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.

14:24 (IST)31 Dec 2019

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!
most impressed films of 2019, kaithi movie

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் தீபாவளிக்கு வெளியானது. விடுதலையான முன்னாள் ஆயுள் தண்டனை கைதி, குற்றவாளிகளைப் பிடிக்க, போலீஸ் அதிகாரிக்கு எவ்வாறு உதவி செய்கிறான் என்பது தான் கதை. ஆனால் யூகிக்க முடியாத களமும், திரைக்கதையும் படத்தை சுவாரஸ்யமாக்கின. ஒருபுறம் ஆக்ரோஷமான சண்டை, மறுபுறம் மகள் மீது வைத்திருக்கும் அன்புக் கடந்த அன்பு என ரசிகர்களைக் கவர்ந்தார் கார்த்தி. 

14:24 (IST)31 Dec 2019

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!

Most Impressed films of 2019, asuran movie

அசுரன் : இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் கூட்டணியில் நான்காவதாக வெளியான இப்படம், அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கியது. எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை ஏற்கனவே படித்திருந்தவர்கள் கூட, அதை திரைப்படமாக பெருந்திரையில் காண ஆர்வமானார்கள். அசுரன் என்றாலே கொடூரமானவன் (இராவணன்) என்றிருந்த கற்பிதத்தை உடைத்திருந்தார் வெற்றிமாறன். பட்டியல் சமூகத்தினருக்கும் இடைநிலை சாதியினருக்குமிடையேயான தொடர்பு எப்படி இருக்கிறது என்பதை சினிமாத்தனம் ஏதுமின்றி, நிதர்சனத்தை திரையில் காட்டியிருந்தார்.  படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும்,  வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

12:44 (IST)31 Dec 2019

புத்தாண்டு கொண்டாட்டம் – ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பயனர்களின் கவனத்திற்கு (2/2)

விருந்துக்குப் பின்னர் குடிபோதையில் எந்தவொரு விருந்தினரும் வாகனம் ஓட்டவில்லை என்பதை ஹோட்டல் அல்லது ரிசார்ட்டின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். குடிபோதையில் விருந்தினர்களை அவர்களின் இல்லங்களில் இறக்கிவிட ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.  சில சந்தர்ப்பங்களில், விருந்தினர்களை தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக பாதுகாப்புக் காவலர்களை ஏற்றிச் செல்லலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறை தீ தடுப்பு பாதுகாப்பு தொடர்பான விதிகளையும் வகுத்துள்ளனர். அதோடு, அவசரகால சூழ்நிலைகளில் அவசரவழிகளில் எவ்வாறு வெளியேறுவது என்பதை பயன்படுத்துவது குறித்து அனைத்து பார்வையாளர்களுக்கும் விளக்குமாறு ஹோட்டல் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்

 

12:42 (IST)31 Dec 2019

புத்தாண்டு கொண்டாட்டம் – ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பயனர்களின் கவனத்திற்கு (1/2)

பார்ட்டிகள் மற்றும் புத்தாண்டு கொண்ட்டாட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருக்கும் இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களை அமைக்குமாறு ஹோட்டல்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். மேலும், ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களை மூடுமாறும்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு செய்ய முடியாதவர்கள் பார்வையாளர்களை குளங்களிலிருந்து விலக்கி வைக்குமாறு பாதுகாப்புக் காவலர்களிடம் கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நீச்சல் குளம் அருகே எந்த பார்ட்டியும் நடத்தக்கூடாது. குளத்தின் மேல் எந்த மேடைகளும் அமைக்கக்கூடாது என்று போலீசார் தெரிவிக்கபப்ட்டுள்ளது .

12:39 (IST)31 Dec 2019

உச்சக்கட்ட நியூ இயர் மூடில் இசிஆர் – பார்ட்டி ரன்வே ரெடி

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் இசிஆர் சாலையை நோக்கி பயணித்து வருகின்றனர். இதனால், வாடகை கார்களின் தேவை மிகவும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.   கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்)  உள்ள ரிசார்ட்ஸ் / ஹோட்டல்களுக்கான பயணங்களுக்கு செடான் கார்களுக்கு பெரும் தேவை உள்ளதாக வாடகை கார் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

10:58 (IST)31 Dec 2019

புத்தாண்டு கொண்டாட்டம் – கூகுள் டூடுலின் ‘Froggy’

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக  கூகுள் டூடுல்  தனக்கு பிரபலமான ‘Froggy’ டூடுலைப் பயன்படுத்தியுள்ளது. கூகுள் வானிலை ஆப்பில் இந்த ‘Froggy’ பயன்படுத்துவது உண்டு. வானிலை குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்துவதாலும் , 2020  leap year என்பதால் Froggy  leap செய்ய தயாராவது போல் இந்த டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.    

10:25 (IST)31 Dec 2019

2019 ஆண்டும், நமது அரசியல் தலைவர்களின் சர்ச்சை பேச்சும்

தமிழக அரசியலில், 2019ம் ஆண்டு ஒரு சாதாரண ஆண்டாக கடந்துவிடவில்லை. 2019ம் ஆண்டில் தமிழக அரசியல் தனது அடுத்த பரிணாமத்திற்கான விதையை விதைத்துள்ளது என்றே சொல்லலாம். 

தமிழ்நாடு அரசியல் களத்தில்  நமது தலைவர்கள் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பான முழு அலசலை இங்கே காணலாம்  

10:19 (IST)31 Dec 2019

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு:

புத்தாண்டு தினத்தன்று ஆயத்த பணியின்  ஒரு பகுதியாக, 65 ஆம்புலன்ஸ்கள் (15 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் அடங்கும்)  இன்று நகரின் விபத்து ஏற்படும் முக்கிய இடங்களில்  நிறுத்தப்படும் என்று தமிழக அரசு  தெரிவித்துள்ளது. அதிகம் கூட்டங்கள் கூடுவதால் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்று தமிழக அரசு நம்புகிறது.   விபத்து பராமரிப்பு மையங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.  

10:08 (IST)31 Dec 2019

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இரவு 8 மணிமுதல் சென்னை சாலைகள் மாற்றியமைப்பு (3/3)

7. எந்த வாகனங்களும் லூப்ரோடு வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது, சீனிவாசபுரம் சந்திப்பு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும்.

8. டாக்டர் ராதாகிருஷ்னன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்து சாலை, போர்நினைவு சின்னம் ஆகியவற்றிலிருந்து வரும் வாகனங்களை காமராஜர் சாலைக்கு இரவு 08.00 மணி முதல் அனுமதிக்கப்படமாட்டாது. அந்த வாகனங்களை கீழே குறிப்பிட்ட வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திக்கொள்ளலாம்.

எலியட்ஸ் கடற்கரையில் செய்யப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6வது அவின்யுவில் 31.12.2019 இரவு 08.00 மணி முதல் 01.01.2020 அதிகாலை 04.00 மணி வரை எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது.

பெசன்ட் நகர் 6வது அவின்யு இணைப்பு சாலைகளான 5வது அவின்யு, 4வது பிரதானசாலை, 3வது பிரதானசாலை, 16வது குறுக்குதெரு ஆகிய பகுதிகள் தடுக்கப்படும். மகாத்மா காந்தி சாலை, 7வது அவின்யு சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது .

10:07 (IST)31 Dec 2019

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இரவு 8 மணிமுதல் சென்னை சாலைகள் மாற்றியமைப்பு (2/3)

4. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பிலிருந்து போர் நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் இரவு 08.00 மணி முதல் கொடிமர சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு அண்ணா சாலை சென்றடையலாம்.

5. அடையாரில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து கச்சேரி ரோடு, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மியூசிக் அகாடமி வழியாக அண்ணா சாலை சென்றடையலாம்.

6. காரணீஸ்வர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையை நோக்கி செல்ல அனுமதிக்காமல் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.

10:06 (IST)31 Dec 2019

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இரவு 8 மணிமுதல் சென்னை சாலைகள் மாற்றியமைப்பு (1/3)

புத்தாண்டை முன்னிட்டு, சென்னை கடற்கரைச் சாலை, எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் வாகன போக்குவரத்து இரவு 8 மணிமுதல் மாற்றப்படுகிறது.

கடற்கரை காமராஜர் சாலையிலும், ராஜாஜி சாலையிலும் செய்யப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் 31.12.2019 அன்று இரவு 08.00 மணி முதல் சாலை தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு வாகனங்கள் கடற்கரை உட்புறச்சாலையில் நுழையாமல் தடைசெய்யப்படும்.

2. கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக வெளியே செல்வதற்கு இரவு 08.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். அதன் பிறகு கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் மட்டுமே வெளியேற்றப்படும் .

3. காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரையில் 31.12.2019 அன்று இரவு 08.00 மணி முதல் 01.01.2020 அன்று அதிகாலை 04.00 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

09:53 (IST)31 Dec 2019

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஓலா நிறுவனத்தின் சிறப்பு ஏற்பாடு

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது  பொது மக்களுக்கு  உதவும் வகையில் சிறப்பு  பயிற்சி பெற்ற  பாதுகாப்பு நிபுணர்களை  நகரின் முக்கிய சாலைகளில் களம் இறக்குவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு நிபுணர்கள் தங்கள் ஓலா கார்களின் மூலம் பொதுமக்களுக்கு அடிப்பை  உதவிகளை செய்வார்கள்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . ‘பாதுக்காப்பான புத்தாண்டு கொண்டாட்டம்’  என்பதை மனதில் வைத்து  இந்த ஏற்பாடுகளை செய்திருப்பதாக  ஓலா நிறுவனம் கூறியுள்ளது.     

09:18 (IST)31 Dec 2019

புத்தாண்டை வரவேற்க தயாராகும் சென்னை

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னையில் உள்ள முக்கியாமான  இடங்களில் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையம், திநகர், அடையார் , போன்ற நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் பொது இடங்கள் வண்ண மையமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் உள்ள முக்கிய மத ஆலயங்களில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது . 

Chennai New Year Eve updates:  புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கிலும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரை சுற்றி பார்க்கும்( எங்கும் ஏறலாம், எங்கும் இரங்கலாம்)  வசதியை புத்தாண்டு ஆண்டு ஒரு நாள் மட்டும் ஏற்பாடு செய்துள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: New year eve live chennai new year party celebration marina beach happy new year wishes

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com