Advertisment

Breaking News in Tamil : RTGS நேரம் நீட்டிப்பு

இன்றைய வானிலை, அரசியல் நிகழ்வுகள், கட்சி விவகாரங்கள், கட்சித் தலைவர்களின் பயணங்கள் என அனைத்து செய்திகளையும் இந்த இணைப்பில் நீங்கள் படிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Breaking News in Tamil : RTGS  நேரம் நீட்டிப்பு

News in Tamil : Latest, Breaking, and Live News Updates : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுடன்.

Advertisment

இன்றைய வானிலை, அரசியல் நிகழ்வுகள், தலைவர்களின் சந்திப்புகள், கட்சி விவகாரங்கள், கட்சித் தலைவர்களின் பயணங்கள் என அனைத்து செய்திகளையும் நீங்கள் இந்த இணைப்பில் படிக்கலாம்.

 Blog

 News Updates : இன்றைய செய்திகள் உடனுக்குடன் உங்களின் பார்வைக்கு

20:56 (IST)28 May 2019


RTGS நேரம் நீட்டிப்பு

ஆன்லைனில் ஜூன் 1 முதல் வங்கி வாடிக்கையாளர்கள் RTGS முறையில் மாலை 6 மணிவரை பணம் அனுப்பலாம் - கால நிர்ணயத்தை மாலை 4:30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நீட்டித்தது ரிசர்வ் வங்கி * RTGS முறையில் தற்போது காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பணம் அனுப்பும் நடைமுறை உள்ளது

19:44 (IST)28 May 2019


பிரதமராக மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்பு

மே 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறேன் பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்து கொள்கிறேன் - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

19:02 (IST)28 May 2019


தமிழகத்தின் 17 இடங்களில் வெயில் இன்று சதம்

தமிழகத்தில் இந்த ஆண்டில் முதல் முறையாக 17 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. திருத்தணி-112, வேலூர்-110, திருச்சி, மதுரையில்-108, கரூர் பரமத்தியில்-107, பாளையங்கோட்டை, மதுரை தெற்கில் 106, சேலம், சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது

18:19 (IST)28 May 2019


விடைத்தாள் முறைகேடு விவகாரம் : அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில்,  அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேரை சஸ்பெண்ட்  செய்து   துணைவேந்தர் சூரப்பா நடவடிக்கை எடுத்துள்ளார்.

17:50 (IST)28 May 2019


எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிப்பு

முதுநிலை மருத்துவ படிப்பு - 124 இடங்கள் அதிகரிப்பு

384 முதுநிலை மருத்துவ பட்டய இடங்கள், முதுநிலை பட்டமாக மாற்றம்

இதன்மூலம் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள் 508 ஆக அதிகரிப்பு

17:09 (IST)28 May 2019


விவசாயிகளை பிரித்து பார்க்கமாட்டோம் : கர்நாடக அமைச்சர்

கர்நாடகாவை பொறுத்தவரை, கர்நாடகா விவசாயிகள், தமிழக விவசாயிகள் என பிரித்துப் பார்க்கமாட்டோம் என கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுப்போம் . கர்நாடகாவில் போதிய நீர் இருக்கும் பட்சத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

17:02 (IST)28 May 2019


பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

நாட்டின் பிரதமராக வரும் 30ம் தேதி, இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, டில்லியில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். பிரணாப் முகர்ஜி, மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

16:22 (IST)28 May 2019


தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் பிரச்சனையில்லை - கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர்

கர்நாடகாவில் போதிய நீர் இருந்தால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு தொடர்பாக விரைவில் ஒரு முடிவு எட்டப்படும் என கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கருத்து.

15:41 (IST)28 May 2019


ராகுல் காந்தி பதவி விலக வேண்டாம் - முக ஸ்டாலின்

காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலக வேண்டாம் என்று திமுக  தலைவர் முக ஸ்டாலின் போனில் அழைத்து வேண்டு கோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவராக ஸ்டாலின் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினரின் ஒரு மித்த கருத்து என்று சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

14:42 (IST)28 May 2019


Cauvery Management Authority Meeting : தண்ணீர் திறந்துவிட உத்தரவு

தமிழகத்துக்கு ஜூன் மாத பங்கீடான 9.19 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகாவிற்கு உத்தரவு

14:17 (IST)28 May 2019


ஆந்திராவின் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டு அதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது அம்மாநிலத்தின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்க உள்ளார். அந்த விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

12:55 (IST)28 May 2019


பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றேன் - ரஜினி காந்த்

காவிரி கோதாவரி நதிகளை இணைக்கும் திட்டத்தினை வரவேற்கின்றேன்  என்று ரஜினி கூறியுள்ளார். மேலும் நாளை மறுநாள் நடைபெறும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தி தற்போது பதவி விலககூடாது. எதிர்க்கட்சி தலைவராக தன்னுடைய பணியை அவர் தொடர வேண்டும், தோல்விக்கான காரணங்களை அவர்கள் கண்டறிய வேண்டும் என்றும் பேச்சு.

12:54 (IST)28 May 2019


இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றே மக்களைக் கவர்ந்த தலைவர் மோடி

தனிமனிதனின் தலைமைக்கு கிடைத்த வெற்றி இது என்றும், இந்திரா, ராஜீவ் காந்தி போன்றே மக்களை கவரும் தலைவராக மோடி இருக்கிறார் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி கூறியுள்ளார்.  தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இருக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் பலமாக இருந்ததால் பாஜகவின் வெற்றி கை கூடவில்லை. பாஜக தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களின் விளைவாகவே இந்த தோல்விக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

12:26 (IST)28 May 2019


சசிகலா அன்னிய செலாவணி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.

11:34 (IST)28 May 2019


மேகதாது திட்டத்தை இனி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது - தமிழக அரசு

இன்று நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டத்தில் , மேகதாது திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையை விவாத பொருளாக நிரலில் இணைத்திருக்கிறாது கர்நாடகா. இதற்கு தமிழக அதிகாரிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேகதாது திட்டம் குறித்த கர்நாடகாவின் நிகழ்ச்சி நிரலை திரும்ப பெற வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் மேகதாது விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கூடாது என்றும் தமிழகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

11:19 (IST)28 May 2019


ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட திமுக எம்.எல்.ஏக்கள்

சபாநாயகர் தனபால் அறையில் திமுக எம்.எல்.ஏக்கள் 13  பேர் இன்று பதவியேற்றுக் கொண்டர். ஸ்டாலின் தலைமையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். publive-image

11:04 (IST)28 May 2019


தமிழக தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் என்னென்ன ?

தமிழகம், கேரளம், கர்நாடகம், மற்றும் புதுவை மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உருவாக்கப்பட்டது. 4 மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இந்த இரண்டு குழுவிற்கும் தலா ஒன்று என்ற நிலையில் அனுப்பப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த ஆணையம் இரண்டு முறை கூடியுள்ளது. டிசம்பர் மூன்று 2018ம் ஆண்டு இந்த குழு கடைசியாக கூடியது. ஒழுங்காற்றுக்குழு மே 23ம் தேதி கூடியது.

மேட்டூர் அணையில் தண்ணீரின் இருப்பு மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தால் காவிரி நீரை தர வேண்டும் என்று தமிழகம் சார்பில் அன்றைய கூட்டத்தில் வாதிடப்பட்டது. ஆனாலும் முடிவுகள் எட்டப்படவில்லை. இன்று  ஜூன் 1 - 9.19 டி.எம்.சி தண்ணீரையும், ஜூலை 30-ல் 30 டி.எம்.சி. தண்ணீரையும் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளனர் தமிழக தரப்பினர்.

10:53 (IST)28 May 2019


DMK 13 MLAs : ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அறையில் பொறுப்பேற்றுக் கொள்ளும் 13 எம்.எல்.ஏக்கள்

தற்போது நடைபெற்று முடிந்த 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று தங்களின் பதவிகளை ஏற்றுக் கொள்கின்றனர். அண்ணா அறிவாலயத்தில் இருந்து தலைமைச் செயலகம் சென்ற அவர்கள், சபாநாயகர் அறையில், ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.  நாளை மீதமுள்ள 9 தொகுதி எம்.எல்.ஏக்கள் தங்களின் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றனர்.

10:46 (IST)28 May 2019


இன்றைய வானிலை : Today Weather Update

நாளையோடு தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடியவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டிற்கும் மேலே சென்று செம்ம ஹிட் அடித்துள்ளது. சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பரில் மழை பெய்ததுடன் சரி, அதற்கு பின்னர் மழை பெய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

10:44 (IST)28 May 2019


Petrol and Diesel Price in Chennai - பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வு

இன்று சென்னையில் பெட்ரோல் விலை 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.59 காசுகளாகவும், டீசல் 5 காசுகள் அதிகரித்து ரூ.70.50 பைசாவிற்கும் விற்பனையாகிறது.

10:43 (IST)28 May 2019


Tamil Nadu Assembly

தமிழக சட்டப்பேரவை ஜூன் இரண்டாவது வாரத்தில் கூடுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன

10:42 (IST)28 May 2019


திருப்பதியில் தரிசனம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் கலந்து கொண்ட அவரின் குடும்பத்தினர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்பினர்.

10:42 (IST)28 May 2019


Cauvery Management Authority Meeting

காவேரி மேலாண்மை ஆணையத்தின் 3வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. காவேரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசைன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

பருவமழை தொடங்க இருக்கின்ற இந்த நேரத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் இன்றி வாடிவரும் விவசாயிகளுக்கு காவிரி நீரினை வழங்குவது தொடர்பாக இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெறுகிறது.
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment