Advertisment

Tamil News Today : சென்னையில் சுத்தமில்லாத காலி இடங்கள்; மாநகராட்சிக்கு சொந்தம் என பெயர்ப்பலகை

news today live : கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை எட்டியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today : சென்னையில் சுத்தமில்லாத காலி இடங்கள்; மாநகராட்சிக்கு சொந்தம் என பெயர்ப்பலகை

tamil news today : கோவையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராசமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையில், கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை எட்டியுள்ளதால் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் பதிவேற்றம் இன்று தொடங்க இருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா.என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால் அதிர்ச்சிசட்டப்பேரவை கூட்டத் தொடரில் எம்எல்ஏ ஜெயபால் பங்கேற்றார். 20ம் தேதி தொடங்கிய கூட்டத் தொடரில் 3 நாட்களுக்கு ஜெயபால் பங்கேற்றார்.

ஏபிவிபி தலைவர் மீது பெண் புகார்: போலீஸ் விசாரணை!

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுவப்னா சுரேஷ், ரமீஸ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட தங்கம் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடை மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சங்கிலி எனும் பகுதிக்கும் விற்கப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் திருச்சி நகை கடையில் சோதனை நடத்தவும் நகை கடை உரிமையாளருக்கு சம்மன் அனுப்பவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:34 (IST)25 Jul 2020

    சென்னையில் காலி இடங்கள் சுத்தமில்லாமல் இருந்தால் மாநகராட்சிக்கு சொந்தம் பெயர்ப்பலகை

    சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னையில் காலி இடங்கள் சுத்தமில்லாமல் இருந்தால் மாநகராட்சிக்கு சொந்தம் என பெயர் பலகை வைக்கப்படும்! தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு சொந்த செலவிலேயே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

    21:30 (IST)25 Jul 2020

    நடிகர் விஷாலின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி

    நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. இது குறித்து நடிகர் விஷால் கூறுகையில், “என் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மைதான்; அவருக்கு உதவியாக இருந்த எனக்கும், எனது மேலாளருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தன. ஆயூர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்ட ஒரு வாரத்தில் குணமடைந்துவிட்டோம். இப்போது ஆரோக்கியமாக உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

    20:28 (IST)25 Jul 2020

    அதிமுகவில் நிர்வாகிகள் அதிரடி மாற்றம்; தலைமைக் கழகம் அறிவிப்பு

    அதிமுகவில் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக பிரிக்கப்படுகிறது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

    அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் இசக்கி சுப்பையா, புத்திச்சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பாப்புலர் முத்தையா, நடிகை விந்தியா ஆகியோர் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    18:55 (IST)25 Jul 2020

    தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 7,758 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 7,758 குணமடைந்துள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1,51,055 பேர்கள் குனமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:55 (IST)25 Jul 2020

    தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 7,758 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 7,758 குணமடைந்துள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1,51,055 பேர்கள் குனமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:04 (IST)25 Jul 2020

    தமிழகத்தில் இன்று 6,988 பேருக்கு கொரோனா மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    17:02 (IST)25 Jul 2020

    ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கம் தொடர்பாக சட்டப் போராட்டம் தொடரும் - ஜெ.தீபா

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீடு அரசுடமையாக்கப்படுவது தொடர்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறுகையில், “ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கடனுக்கு நாங்கள் தான் பொறுப்பேற்றுள்ளோம். ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கடனுக்கு நாங்கள் தான் பொறுப்பேற்றுள்ளோம். ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கப்படுவது தொடர்பாக சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

    15:54 (IST)25 Jul 2020

    நாட்டின் நிதி நிலை வலுவாக உள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

    நாட்டின் நிதி நிலை வலுவாக உள்ளதாகவும், ஆனால் கவனத்துடன் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்

    14:50 (IST)25 Jul 2020

    ராமதாசுக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

    இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டார். 

    அவர் பதிவு செய்த செய்திக் குறிப்பில், "  இன்று 81 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன். உடலும் உள்ளமும், நலமும் திடமும் கொண்டு நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன்! " என்று தெரிவித்தார்.   

    14:44 (IST)25 Jul 2020

    உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் எடுத்தாரா என்பதற்கு தற்போது வரை ஆதாரம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

    உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் எடுத்தாரா என்பதற்கு தற்போது வரை ஆதாரம் இல்லை என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  

    திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாத்தன்குளத்திற்கு நேரடியாக சென்று ஜெயராஜ்/பென்னிக்ஸ்   குடும்பத்திற்கு ஆறுதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    14:37 (IST)25 Jul 2020

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 432 பேருக்கு கொரோனா

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 6,793ஆக அதிகரித்தது.  

    14:15 (IST)25 Jul 2020

    ஆக்சிசன் சிலிண்டர் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர்  விஜயபாஸ்கர்

    கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ஓமாந்தூரார் சிறப்பு மருத்துவமனையில் ஆக்சிசன் சிலிண்டர் நிறுவும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    மேலும், "கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் தான் நாட்டிலேயே அதிக அளவு RT-PCR பரிசோதனைகளை நடத்தப்படுகின்றன "

    என்று  தெரிவித்தார்.

    13:53 (IST)25 Jul 2020

    மேட்டூர் அணை நீர்மட்டம்: வினாடிக்கு 4,977 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 66.42 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,977 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது .

    13:52 (IST)25 Jul 2020

    உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணங்களில் நவம்பர் 24ம் தேதி வரை தற்போதைய நடைமுறையே தொடரும்

    உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணங்களில் நவம்பர் 24ம் தேதி வரை தற்போதைய நடைமுறையே தொடரும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா  ஊரடங்கு காலத்தில் விமானப் போக்குவரத்துக்கான அதிகபட்சம் மற்றும் குறைந்த பட்ச கட்டணங்களை அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில் அந்த வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

    13:48 (IST)25 Jul 2020

    முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி

    மத்தியப் பிரேதேச மாநில முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.    

    13:46 (IST)25 Jul 2020

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை முழு ஊரடங்கு

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் நாளை முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் - மாவட்ட நிர்வாகம்.

    13:44 (IST)25 Jul 2020

    பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்ட பணிகள்

    வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்ட பணிகள் அடுத்த மாதம் முதல் தேதி தொடங்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

    13:44 (IST)25 Jul 2020

    9 மண்டலங்கள் நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

    சென்னை மாநகராட்சியில் 9 மண்டலங்கள் நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

    13:39 (IST)25 Jul 2020

    ஜெ.அன்பழகன் மகனுக்கு திமுக.வில் புதிய பொறுப்பு

    கொரோனா பெருந்தொற்றால் மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ மகன் ராஜா அன்பழகனை சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா திமுக நியமித்தது.  

    12:40 (IST)25 Jul 2020

    தமிழக அரசு அரசாணை!

    சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சி பெற அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் பயிற்சிகளை தவிர்த்து மீதமுள்ள விளையாட்டு பயிற்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    12:37 (IST)25 Jul 2020

    ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு!

    கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

    இது குறித்து கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு போதுமான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினிகள் வழங்கப்படுவதை, அக்கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் உறுதி படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:35 (IST)25 Jul 2020

    தற்காலிக மதிப்பெண் பட்டியல்!

    12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அவர்கள் படித்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்து தரப்படுகிறது. மானவர்கள் பள்ளிக்கு நேராக சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    12:27 (IST)25 Jul 2020

    ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்!

    ரூ.9.76 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைக்கிறார். கள்ளக்குறிச்சியில் இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமையவுள்ளது. 

    12:12 (IST)25 Jul 2020

    நீதித்துறை நடுவர் நீதிமன்றம்!

    விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்கு உட்பட்ட புளிச்சப்பள்ளம் பகுதியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கும் பணிக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று  அடிக்கல் நாட்டினார். 

    11:57 (IST)25 Jul 2020

    3 நகரங்களில் பரிசோதனை ஆய்வகங்கள்!

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா, மகாராஷ்டிராவின் மும்பை, உத்தரபிரதேச மாநிலம் நொய்டா ஆகிய மூன்று நகரங்களில் பரிசோதனை ஆய்வகங்கள் துவக்க விழாவை வரும் 27ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார். அப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    11:30 (IST)25 Jul 2020

    உச்சத்தில் தங்க விலை!

    கடந்த 2 நாட்களாக தங்க விலை உச்சத்தை எட்டியுள்ளது. இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,232க்கு விற்பனை

    11:27 (IST)25 Jul 2020

    கொரோனா தடுப்பூசி பணி!

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்,  கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது. முதலாவதாக 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கோவாக்சின் தடுப்பூசியை போட்டு கொண்டார், மொத்தம் 5 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டிலேயே அவர்கள் 7 நாட்களுக்கு கண்காணிப்படுவார்கள் என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    11:24 (IST)25 Jul 2020

    கொரோனா உயிரிழப்பு!

    சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேர் கொரோனாவால் உயிரிழப்பு . அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தலா 2 பேர் உயிரிழப்பு. 

    10:30 (IST)25 Jul 2020

    ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்!

    சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பழைய நிலையே தொடர வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில்  தீர்ப்பளித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பழைய நி​லையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், சச்சின் தரப்பு கோரிக்கையை ஏற்று மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

    10:24 (IST)25 Jul 2020

    என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா!

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது . கருத்தரங்க அரங்கில் இன்று கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரவை வளாகம் மற்றும் மாமன்ற அரங்கில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. 

    today : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டபோது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு போட்டுள்ளதாக திமுக எம்பி கனிமொழி கூறி இருக்கிறார்.

    ஒவ்வொருவரும் தனது தாய் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தவராக இருக்கவேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் ஆளுநர் மாளிகை வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சட்டப்பேரவையை கூட்டுவது குறித்து தாம் நிபுணர்களுடன் விவாதிக்க வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆளுநர் மாளிகை வளாகத்தில், எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சரும், உள்துறையும் பாதுகாப்பு வழங்காவிட்டால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விடாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் தனது பாதுகாப்புக்கு எந்த துறையை அணுக வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். தவறான செயலுக்கு இது தொடக்கம் அல்லவா என்றும் ஆளுநர் வேதனை தெரிவித்துள்ளார்.

    Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment