ரபேல் மறு சீராய்வு வழக்கு: தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

today headlines in tamil : இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இணைந்திருங்கள் ஐ.இ தமிழுடன்.

News In Tamil:  தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் ஆணையம் பற்றிய செய்திகள், வழக்கு விசாரணைகள், பொதுப் பிரச்னைகள், காலநிலை, தங்கம் வெள்ளி விலை, பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்ட அனைத்தையும் ஐ.இ தமிழில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Latest Tamil News Live updates:

குறிப்பாக வரும் 19-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் நடக்கும் இந்தத் தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Live Blog

News in Tamil today headlines live updates : இன்றைய தமிழக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள். அத்துடன் பிற நகர செய்திகளை படிக்க.. English  

16:41 (IST)10 May 2019
News In Tamil: ரபேல் மறு சீராய்வு வழக்கு: தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

ரபேல் விவகார மறு சீராய்வு வழக்கில் விசாரணை நிறைவடைந்தது. தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

16:10 (IST)10 May 2019
ஸ்டாலின் அஞ்சலி!

மறைந்த முன்னாள் திமுக எம்.பி. மு.ராமநாதன் உடலுக்கு ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி  செலுத்தினார். 

15:48 (IST)10 May 2019
cm palaniswami latest : 2 ஆம் கட்ட பரப்புரைக்கு தயாராகும் முதல்வர்!

இடைத்தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி நாளை முதல் மே 14 வரை 2ம் கட்ட பரப்புரை மேற்கொள்ளைருக்கிறார்.  நாளை திருப்பரங்குன்றம் தொகுதியிலும் நாளை மறுநாள் ஒட்டப்பிடாரத்திலும் முதல்வர் பரப்புரை.  மே 13ல் அரவக்குறிச்சி தொகுதியிலும் மே 14ல் சூலூர் தொகுதியிலும் பரப்புரை. 

14:58 (IST)10 May 2019
chennai weather : மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 2 தினங்களுக்கு கோவை, ஈரோடு, திருச்சி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனல் காற்று வீசும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13:16 (IST)10 May 2019
madurai government hospital : மதுரை அரசு மருத்துவமனை

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் 3 பேரும் மின் தடையால் இறக்கவில்லை என உறுதியாக கூற முடியும் என மருத்துவமனை டீன் வனிதா பேட்டியளித்துள்ளார். 

11:57 (IST)10 May 2019
AIADMK latest news : சபாநாயகர் நோட்டீஸூக்கு தடை!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஏற்கனவே அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் வழக்கில் நோட்டீஸுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது எம்.எல்.ஏ பிரபுவுக்கு அனுப்பட்ட நோட்டீஸூக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். 

11:09 (IST)10 May 2019
election commission latest : உள்ளாட்சி தேர்தல்!

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம். 

11:06 (IST)10 May 2019
latest tamil news: மதுரையில் பரபரப்பு!

மதுரை- செங்கோட்டை வழிதடத்தில் ஒரே நேரத்தில் 2 ரயில்கள் பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொடி பொழுதில் மிகப் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. 

09:41 (IST)10 May 2019
mk stalin latest news : கொடைக்கானலின் ஸ்டாலின்!

4 தொகுதி இடைத்தேர்தலுக்கு தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட ஸ்டாலின், ஒருநாள் பிரச்சாரத்திற்கு ஓய்வு கொடுத்து, மனைவியுடன் கொடைக்கானலில் சுற்றுலாத்தளங்களை சுற்றி பார்த்தார். 

News in Tamil today : தமிழக அரசியல், பொதுப் பிரச்னைகள், வழக்கு விசாரணைகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், வெதர் அப்டேட் உள்ளிட்ட இன்றைய தமிழக செய்திகளை ஐ.இ தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Web Title:

News in tamil today headlines live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close