Advertisment

கடலூர், சேலம், காயல்பட்டினத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் தமிழகத்தில் கடலூர், சேலம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NIA officers raid at kayalpattinam, தேசிய புலனாய்வு முகமை, என்ஐஏ, சேலம், கடலூர், காயல்பட்டினம், என்ஐஏ சோதனை, NIA officers raid at salem, NIA officers raid at cuddalore, nia raid in tamilnadu, NIA

NIA officers raid at kayalpattinam, தேசிய புலனாய்வு முகமை, என்ஐஏ, சேலம், கடலூர், காயல்பட்டினம், என்ஐஏ சோதனை, NIA officers raid at salem, NIA officers raid at cuddalore, nia raid in tamilnadu, NIA

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் தமிழகத்தில் கடலூர், சேலம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், கடந்த ஜனவரி மாதம் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தபோது மர்ம கும்பலால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த தௌஃபிக், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் ஆகி இரண்டு பேரையும் பிப்ரவரி 14-ம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

வில்சன் கொலை நடப்பதற்கு முன்பு, டிசம்பர் 11-ம் தேதி தௌஃபிக், அப்துல் சமீம் இருவரும் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் உள்ள சீதக்காதி நகரில் வசிக்கும் மொஹிதீன் பாத்திமா வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மொஹிதீன் பாத்திமாவுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காயல்பட்டினத்தில் உள்ள வீட்டில் உள்ள பாத்திமா வீட்டில் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் கேரளாவைச் சேர்ந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு ஈடுபட்டனர்.

அதே நேரத்தில், சேலத்தில் முகமது புரா பகுதியில் உள்ள அப்துல் ரஹ்மான் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் அண்மையில் செலோன் சிம் கார்டுகள் வாங்க ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர்களுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்துல் ரஹ்மான் வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் பின்ன அப்பகுதியில் உள்ள அவரது செல்போன் கடையிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் கடலூர் பத்தாம் பாக்கத்தில் ஜாஃபர் அலி என்பவரது வீட்டில் என்.ஐ.அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதே போல், பரங்கிப்பேட்டையில் அப்துல் சமீது என்பவரது வீட்டிலும் புத்தூரில் காஜா மொய்தீன் எம்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் ஒரே நாளில் கடலூர், சேலம், காயல்பட்டினம் என பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

Tamilnadu Cuddalore Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment