Advertisment

நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி திடீர் தியானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nirmala devi, professor nirmala devi, college students, mislead, cbcid inquiry, cbi inquiry, நிர்மலா தேவி, பேராசிரியை நிர்மலாதேவி, சிபிசிஐடி விசாரணை

nirmala devi, professor nirmala devi, college students, mislead, cbcid inquiry, cbi inquiry, நிர்மலா தேவி, பேராசிரியை நிர்மலாதேவி, சிபிசிஐடி விசாரணை

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது 3 பேருமே ஜாமீனில் உள்ளனர்.

ஆனால், சிபிசிஐடி வசமுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சுகந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாணவிகளிடம் மாஜிஸ்திரேட் முன்பாக வாக்குமூலம் பெறவில்லை. நிர்மலாதேவி உயரதிகாரிகளுக்காக மாணவிகளிடம் பேசினார் என்று கூறும் சிபிசிஐடி போலீசார், அந்த உயரதிகாரிகள் யார் என்பதையும் குறிப்பிடவில்லை" என்று வாதிட்டார்.

இதற்கு அரசு தரப்பில் "வழக்கு விசாரணை முறையாகவே நடைபெற்று வருவதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டியதில்லை" என்று எடுத்துரைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜரானார். வழக்கின் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்பும் நீதிமன்றத்தை விட்டு அவர் வெளியேற மறுப்பு தெரிவித்து அமர்ந்திருந்தார்.

திடீர் தியானம் மற்றும் அருள்வாக்கு : அருள்வாக்கு சொல்வதுபோல முணுமுணுத்த அவர், தனக்கு காலை 10 மணிக்கே தீர்ப்பு கிடைத்து தான் விடுதலையாகி விட்டதாகவும், தனக்கு எதிராக குற்றஞ்சாட்டிய மாணவிகள் தூக்குப்போட்டு இறந்து விட்டதாகவும் கூறி அதிர வைத்தார். தனது முடிகளை தானே வெட்டி அதனை தனது காதில் செருகிக்கொண்டும் அவர் அமர்ந்திருந்தார்.இதனால்,நீதிமன்ற வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Professor Nirmala Devi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment