Advertisment

நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?

Nivar Cyclone Chennai கோபாலபுரம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்ட இரண்டு சமூக சமையலறைகள் தேவைப்படுபவர்களுக்கு உணவளித்தன.

author-image
WebDesk
New Update
Nivar Cyclone in Tamilnadu Chennai after effects Tamil news

Nivar Cyclone in Tamilnadu

Tamilnadu after Nivar : 2020-ம் ஆண்டு பல உறக்கமில்லா இரவுகளையும் இரக்கமில்லா பகல்களையும் மக்களுக்குக் கொடுத்திருக்கிறது. கொரோனா முதல் இடுக்கி நிலச்சரிவு வரை துயரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போனது. அந்த வரிசையில் கடந்த சில நாள்களாகச் சென்னை-கடலூர் கடலோர மக்களை கைகளைப் பிசைய வைத்தது 'நிவர்' புயல். எப்போது கரையைக் கடக்கும், விடிந்ததும் நம் கைகளில் என்னவெல்லாம் இருக்கும் என்கிற பதற்றமும் பயமும் நேற்றைய இரவை தூங்காநகரமாக மாற்றியது.

Advertisment

ஏற்கெனவே கடந்த 2015-ம் ஆண்டின் வ்ரதா புயல் உணர்த்திய பாடத்திலிருந்து பெற்ற அனுபவங்கள் அடிப்படையில், Tangedco பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டது. புதன்கிழமை முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தொடர் மழை பெய்தது. இரவு நேரத்தில் காற்று வலுப்பெற்றதால், சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும், சென்னை கார்ப்பரேஷனின் புதிய வடிகால்கள் சீராக இருந்ததால் பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்காமல் இருந்தன.

கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து புதுச்சேரி வரையிலான நிவர் புயலின் பாதையில் அனைத்தும் மூடப்பட்டன. ஈ.சி.ஆர் மற்றும் அதற்கு இணையான ஓ.எம்.ஆர் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த பெரிய ஹோர்டிங்ஸ், போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டன. மெரினா மற்றும் பிற கடற்கரைகள் பொதுமக்களுக்கு கடும் தடைகளை விதித்தது.

புயல் கரையைக் கடப்பதற்குப் பல மணிநேரம் முன்பே, பல இடங்களில் மின்சார சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக டி நகர், கே கே நகர், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், தெற்கு சென்னையின் திருவான்மியூர், வட சென்னையின் வண்ணாரப்பேட்டை, ராயபுரம் மற்றும் புலியந்தோப் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டன.

புதன்கிழமை இரவு 7 மணி முதல் வியாழக்கிழமை காலை 7 மணி வரை சென்னையில் விமானங்கள் செயல்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் மற்றும் எம்டிசி பேருந்துகள் இரவு 8 மணியளவில் இயங்குவதை நிறுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, கடந்த புதன்கிழமை பொது விடுமுறையை அரசாங்கம் அறிவித்திருந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே இருந்தனர். உணவு மற்றும் தண்ணீரைச் சேமித்து வைக்கவும் எச்சரிக்கப்பட்டனர்.

நகரத்தின் 16 நிவாரண மையங்களில் சுமார் 600 பேர் தங்க வைக்கப்பட்டனர். கோபாலபுரம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்ட இரண்டு சமூக சமையலறைகள் தேவைப்படுபவர்களுக்கு உணவளித்தன. மாலையில் ஆங்காங்கே மரங்கள் விழப்பட்ட செய்திகள் வெளிவரத் தொடங்கின. ஆனால், இந்த மோசமான நிலைமையைச் சென்னை கார்ப்பரேஷன் துரிதமாகவே சமாளித்திருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Nivar Cyclone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment