Advertisment

வெள்ள நீரில் வீட்டுக்குள் பாம்பு வந்தால் சென்னை மக்கள் உதவிக்கு தொடர்பு எண் அறிவிப்பு

சென்னையில் வெள்ள நீர் உடன் வீட்டுக்குள் பாம்பு புகுந்தால், மக்கள் பயப்படாமல் உடனடியாக உதவிக்கு அழைக்க வனத்துறை தொலைபேசி எண் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nivar cyclone, snake in house, snake rescue helpline number, சென்னை, நிவர் புயல், வீட்டுக்குள் பாம்பு வந்தால் தொடர்பு எண், சென்னை மக்கள் கவனத்திற்கு, snake rescue help number chennai people, nivar cyclone flood chennai nivar cyclone flood

சென்னையில் வெள்ள நீர் உடன் வீட்டுக்குள் பாம்பு புகுந்தால், மக்கள் பயப்படாமல் உடனடியாக உதவிக்கு அழைக்க வனத்துறை தொலைபேசி எண் அறிவித்துள்ளது.

Advertisment

நிவர் பயல் காரணமாக, சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில் சாலைகள், தெருக்கள், குடியிருப்பைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து இருப்பதால், நாய்கள், பூனைகள், பாம்பு உள்ளிட்ட பிற உயிரினங்கள் வீடுகளுக்கு வர வாய்ப்புள்ளது. அதனால், சென்னையில் வெள்ள நீர் வழியாக வீடுகளுக்குள் பாம்பு புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர்.

வெள்ள நீர் வழியாக வீடுகளுக்குள் பாம்பு புகுந்துவிடுமோ என்று அச்சத்தில் இருக்கும் சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், பாம்புகளைப் பிடிக்க தொலைபேசி உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழையால் குடியிருப்புகளுக்குள் பாம்பு போன்றவை நுழைந்தால் வனத்துறைக்கு தலவல் தரலாம் என்று வேளச்சேரி வனச்சகரக அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் பாம்பு நுழைந்தால் மக்கள் அச்சப்படாமல் உடனடியாக 044 - 22200335 மற்றும் 9566184292 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அறிந்ததும் விரைந்து வந்து பாம்புகளைப் பிடித்துச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2015ம் ஆண்டு வெள்ள பாதிப்பின்போது சில இடங்களில் வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்ததாக கூறப்பட்டது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்புகளைப் பிடிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்மழை காரணமாக வீடுகள், கார் பார்க்கிங் ஆகிய இடங்களில் பாம்புகல் வரக்கூடும். அவற்றைக் கண்டு அச்சமடையவோ, அவற்றை அடித்துக் கொல்லவோ வேண்டாம். 30க்கும் மேற்பட்ட பாம்பு வகைகளில் 4 வகை மட்டுமே ஆபத்தானவை அதனால் பயப்படாமல் உடனடியாக 044 - 22200335 மற்றும் 9566184292 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Chennai Nivar Cyclone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment