Advertisment

தரமற்ற பொங்கல் பரிசு; சொன்னதை செய்யாத ஸ்டாலின்: ஆர்.டி.ஐ- யில் வெளியான தகவல்

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)not taken any action against poor quality of Pongal hampers Tamil News: தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், இன்று வரை எந்த ஒரு நிறுவனமும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று சமீபத்தில் ஆர்.டி.ஐ- யில் வெளியான தகவல் தெரிவிக்கிறது.

author-image
WebDesk
New Update
No action taken on poor quality of Pongal hampers says recent RTI reply 

Pongal hampers

Tamilnadu news in tamil: இந்தாண்டு கொண்டாடப்பட்ட பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 விதமான பொருட்கள் அடங்கிய "பொங்கல் பரிசு தொகுப்பு" வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்தது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பருப்பு, ரவா, கோதுமை, வெல்லம், நெய், கச்சா அரிசி மற்றும் கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கும். இதில், சில பொருட்கள் தரமற்று இருப்பதாக அப்போது புகார்கள் எழுந்தன.

Advertisment

சென்னை அருகே திருப்பதியைச் சேர்ந்த 64 வயது முதியவர் மீது ரேஷன் கடையில் தகராறு செய்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, விஷயங்கள் தீவிரமடைந்தன. முதியவர் முன்பு கடையில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருப்பதைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்து இருந்தார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவரது மகன் தற்கொலை செய்து கொண்டார். இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு, தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (டிஎன்சிஎஸ்சி - TNCSC) எந்த நிறுவனத்தையும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கவில்லை என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள 2.15 கோடி குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க அரசு 1,163 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. ஆனால் 2022 ஜனவரி முதல் வாரத்தில் ரேஷன் கடைகளில் விநியோகம் தொடங்கிய உடனேயே, உணவுப் பொருட்களின் தரம் குறித்து புகார்கள் குவியத் தொடங்கின. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Pongal Cm Mk Stalin Tamilnadu News Update Tamilnadu News Latest Tamilnadu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment