‘ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது’ – எல்.முருகன் உறுதி

உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் திருக்குறளை பிரதமர் முன்னிலைப்படுத்தி வருகிறார். 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது, டெக்னாலஜி அப்கிரேடசன் மட்டுமே நடக்கின்றது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் ஓரே நேரத்தில் அர்ப்பணிக்கபடுகின்றது. 4080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளால் 1,450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

செம்மொழி தமிழ் ஆய்வு மையம் ரூ.20 கோடி மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் திருக்குறளை பிரதமர் முன்னிலைப்படுத்தி வருகிறார். 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படாது. அங்கு தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணிகள் மட்டுமே நடக்கின்றன.டி.டி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு குரூப் 1 அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

11 மருத்துவ கல்லூரிகள் மட்டுமல்ல மதுரை எய்ம்ஸ் பணி நடைபெறுகிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வரின் தமிழ்புத்தாண்டு குறித்த கேள்விக்கு, அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு சித்திரை ஒன்றுதான். அதில் மாற்றமில்லை” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: No air stations will be closed says l murugan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express