Advertisment

7 வருடங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை! அமைச்சரின் பேச்சு உண்மையா?

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை ஏதும் செய்யாமல், முறை விருந்து செய்து நடத்துவது போல் அமைச்சர் பேசியுள்ளது, மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
No attack on Tamil fishermen in last 7 years says OS Maniyan in assembly

No attack on Tamil fishermen in last 7 years says OS Maniyan in assembly

No attack on Tamil fishermen in last 7 years says OS Maniyan in assembly : மார்ச் 17ம் தேதி, தமிழக சட்டசபையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ தென் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் “திமுக ஆட்சி காலத்தில் தான் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தினார்கள். ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலே நடைபெறவில்லை. தமிழக அரசு தான் இதற்கு காரணம் என்று கூறினார்”. ஆனால் அது உண்மையா என்று நாம் வரலாற்றினை கொஞ்சம் செக் செய்வோம்.

Advertisment

பொதுவாகவே கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை விரட்டுவதில் அதிக கடுமையான முறையை பின்பற்றுகிறது இலங்கை கடற்படை. அதே போன்று சில சமயங்களில் வலைகளை அறுத்தல் மற்றும் படகுகளை குறிவைத்தும், மீனவர்களை குறி வைத்தும் துப்பாக்கிச்சூடு நடத்துவதையும் தொடர்ந்து ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளது. இது எதுவே நடக்கவில்லை என்ற ரீதியில் அமைச்சர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க : இன்றைய செய்திகள் Live : கிரண் பேடியை விமர்சித்த விவகாரம் – கைது ஆகிறார் நாஞ்சில் சம்பத்

தங்கச்சிமடத்தை சேர்ந்த தாசன் என்பவரின் மகன் டிட்டோ (29) என்பவரின் படகில் ஜான் பிரிட்டோ, செரோன், பிரட்ஜோ, கிளிண்டன், அந்தோணி, சந்தியாகு ஆகிய 6 பேரும் 2017ம் ஆண்டு, மார்ச் மாதம் 6ம் தேதி, மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடைபட்ட பகுதியில் ஆதம்பாலம் இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் . அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். கழுத்தில் குண்டடி பட்ட பிரிட்ஜோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செரோனுக்கு கையிலும், இடுப்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

publive-image

பிரிட்ஜோவின் அவரின் பிரேதத்தை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவரின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள். அப்போது மீன் வளத்துறை, இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தருவோம் என்றும் கூறினார்.  ஆனால் தற்போதோ, இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை ஏதும் செய்யாமல், முறை விருந்து செய்து நடத்துவது போல் அமைச்சர் பேசியுள்ளது, மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Srilanka Srilankan Navy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment