மழைக்காக காத்திருக்கும் மக்களுக்கு சோகமான செய்தி... சென்னையில் மழை இல்லையாம்!

தமிழகத்தில் பருவமழை குறைந்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை குறைந்துள்ளது என்றும், சென்னைக்கு தற்போது மழை இல்லை தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் சென்னைக்கு தற்போது மழை இல்லை என்று கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது, “நேற்றைய தினம் தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ளமலையடிவாரத்தில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் பகுதியில் நிலவிவருகிறது. இது அடுத்து வரும் மூன்று தினங்களில்மேற்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்றுபுயலாக மாற வாய்ப்புள்ளது.

இதனால் நாளை முதல் 13ஆம் தேதி வரை அந்தமான் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல், இலங்கை, மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிவருகிறது. இதன் கரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.

மேலும், தூத்துக்குடி, திருச்சந்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறிய அவர், தமிழகத்தில் பருவமழை குறைந்துள்ளது. சென்னைக்கு தற்போது மழை இல்லை என்று தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close